சென்னையில் கஞ்சா விற்பனை செய்த இரண்டு போலீசார் - வேலியே பயிரை மேயலாமா?

Update: 2022-04-18 13:50 GMT

சென்னையில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக இரண்டு போலீசார் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை முகப்பேரை சேர்ந்தவர் திலீப் குமார் இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறது. இவர் கஞ்சா விற்பனை செய்து வந்ததாக போலீசார் இவரை கைது செய்துள்ளனர். இதற்கு முன்னரே சென்னை அயனாவரம் பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்பட்டு வருவதாக கீழ்ப்பாக்கம் துணை ஆணையர் கார்த்திகேயன் தலைமையிலான போலீசார் விரைந்து சென்று ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் திலீப் குமாரை கைது செய்தனர்.


அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியது. அதாவது ரயில்வே போலீஸ் அலுவலகத்தில் உதவி ரைட்டராக வேலை செய்து வரும் சக்திவேல் என்பவரும், சைபர் கிரைம் பிரிவில் பணியாற்றும் செல்வகுமார் என்பவரும் கஞ்சா விற்பனை செய்வதற்கு உடந்தையாக இருப்பதாக தகவலை கூறினார்.

இதனை தொடர்ந்து கஞ்சா விற்பனை செய்து வந்ததாக இரண்டு பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் மேலும் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். வேறு யாரேனும் இவர்களிடம் தொடர்பில் உள்ளனரா என்ற கோணத்திலும் விசராணை தீவிரப்படுத்தியுள்ளனர். வேலியே பயிரை மேய்ந்த கதையாக உள்ளது. பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு கஞ்சாவை ஒழிக்கும் போலீசாரே இப்படி போதைப் பொருளை விற்பனை செய்வது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Source, Image Courtesy: Asianet News

Tags:    

Similar News