ஆன்லைன் சூதாட்டத்திற்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை.. ரூ.5000 அபராதம்.. பேரவையில் மசோதா தாக்கல்.!

ஆன்லைன் சூதாட்டத்திற்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை.. ரூ.5000 அபராதம்.. பேரவையில் மசோதா தாக்கல்.!

Update: 2021-02-04 12:25 GMT

ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்கும் சட்ட மசோதாவை தமிழக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேரவையில் தாக்கல் செய்தார். தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த 3 நாட்களாக நடைபெற்று வருகிறது. இன்றைய கூட்டத்தொடரில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் முன்மொழியப்பட்டது.

இதன் பின்னர் ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்கும் சட்டமசோதாவை துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். தமிழகத்தில் அண்மைக் காலமாக ஆன்லைனில் சூதாட்டத்தில் இளைஞர்கள் அதிகளவு ஈடுபட்டு வருகின்றனர். கடன் வாங்கி அது போன்ற விளையாட்டுகளில் ஈடுபட்டு வருகின்றனர். சிலர் தற்கொலையும் செய்து கொள்வதை பார்க்க முடிகிறது. ஆன்லைன் சூதாட்டத்தை நிரந்தரமாக தடை செய்ய வலியுறுத்தி தமிழக அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது.

இந்நிலையில், கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதித்து அவசர சட்டத்தை தமிழக அரசு கொண்டு வந்த நிலையில், தற்போது இந்த சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்நிலையில், ஆன்லைனில் சூதாடுவோருக்கு ரூ.5 ஆயிரம் அபராதமும், 6 மாதம் சிறை தண்டனையும் விதிப்பதற்கு இந்த சட்டம் வழிவகை செய்கிறது. மேலும், சூதாட்ட அரங்கத்தை வைத்துள்ளவர்களுக்கு ரூ.10,000 அபராதமும் 2 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதிக்கப்படும் எனவும் இந்த சட்டத்தின் மூலமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சட்டத்திற்கு பின்னரும் ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கையை காவல்துறை மேற்கொள்ள வேண்டும். அப்போதுதான் சூதாட்டம் நிரந்தரமாக ஒழியும்.

Similar News