2 ஆண்டுகளாக பயிர் காப்பீடு தொகை வழங்காமல் இழுப்பறி - அதிகாரிகள் பதிலளிக்க உத்தரவு!
இரண்டு ஆண்டுகளாக பயிர் காப்பீடு தொகை வழங்காமல் இழுப்பறியில் ஈடுபட்ட அதிகாரிகள் பதில் அளிக்க மதுரை உயர் நீதிமன்றம் உத்தரவு.
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் தாலுகா சுவாமிமலை பகுதியில் சேர்ந்த வரும் தஞ்சை மாவட்ட காவிரி விவசாயிகளின் பாதுகாப்பு சங்கத்தின் செயலாளருமான சுந்தர விமல் நாதன் மதுரை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் குடியிருப்பதாவது, கடந்த 2016 ஆம் ஆண்டு பிரதமர் மந்திரி பசில் பீமா யோஜனா பயிர் காப்பீடு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இயற்கை சீற்றங்கள், நோய் தாக்குதல், வெல்லம், வறட்சி போன்றதுகளால் பயிர்கள் பாதிக்கப்படாமல் விவசாயிகள் சந்திக்கும் நஷ்டங்களை ஈடு செய்யும் வகையில் இந்த திட்டத்தில் பயிர் காப்பீடு செய்தால் குறிய இழப்பீடு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
அதன்படி 2021- 22 மற்றும் 2022-23 ஆகிய ஆண்டுகளுக்கு பல்வேறு வங்கிகளில் பயிர் காப்பீடு செய்ய மத்திய அரசு பரிந்துரை செய்தது. காவேரி டெல்டா பகுதியில் ஏராளமான விவசாயிகள் தங்களின் நெல் சாகுபடிக்கு உரிய காப்பீட்டுத் தொகையை செலுத்தி உள்ளார்கள். இன்றைக்கு கடந்த 2021 ஆம் ஆண்டு பல்வேறு இயற்கை சீற்றங்கள் விவசாயிகள் கடும் நஷ்டத்தை சந்தித்தனர். இந்த ஆண்டு வரலாறு காணாத மழுகினால் பாதிக்கப்பட்டுள்ளோம்.
ஆனாலும் இதுவரை எங்களுக்கு சேர வேண்டிய இழப்பு எடுத்தொகை வழங்காமல் இரண்டு ஆண்டுகளாக இழுத்தடிக்கிறார்கள். எனவே காவிரி டெல்டா பகுதிகளில் உள்ள தமிழக முழுவதும் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு 2021- 22 ஆம் ஆண்டுக்கான ஒரு இழப்பீடு தொகையை வட்டியுடன் வழங்க உத்தரவிட வேண்டும் என்று அந்த மனுவில் கூறுகின்றார். இந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதி, இது சம்பந்தப்பட்ட மத்திய, மாநில அரசு அதிகாரிகள் பதிலளிக்க நோட்டஸ் அனுப்பும் படி உத்தரவிட்டார்.
Input & Image courtesy: Thanthi News