தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் கருப்பு பூஞ்சை அறிகுறியுடன் 20 பேர் அனுமதி.!

தூத்துக்குடி மாவட்டத்தில் கருப்பு பூஞ்சை நோய் தற்போது தொடங்கியுள்ளது. கருப்பு பூஞ்சை அறிகுறிகளுடன் பலர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். நேற்று ஒருவர் கருப்பு பூஞ்சை அறிகுறியுடன் இறந்துள்ளார். இந்த சம்பவம் மருத்துவமனையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2021-06-05 03:30 GMT

தூத்துக்குடி மாவட்டத்தில் கருப்பு பூஞ்சை நோய் தற்போது தொடங்கியுள்ளது. கருப்பு பூஞ்சை அறிகுறிகளுடன் பலர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். நேற்று ஒருவர் கருப்பு பூஞ்சை அறிகுறியுடன் இறந்துள்ளார். இந்த சம்பவம் மருத்துவமனையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது பற்றி தூத்துக்குடி அரசு மருத்துவமனை டீன் நேரு கூறியதாவது: மருத்துவமனைக்கு கருப்பு பூஞ்சை நோய் அறிகுறியுடன் 20 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களுக்கு பரிசோதனை அளிக்கப்படுகிறது. ஏற்கனவே 2 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுவரை அறிகுறியுடன் அனுமதிக்கப்பட்ட 3 பேர் இறந்துள்ளனர். அதில் நேற்று ஒருவர் அறிகுறியுடன் அனுமதிக்கப்பட்ட நபர் இறந்துள்ளார். அவருக்கு கருப்பு பூஞ்சை நோய் உறுதி செய்யப்படவில்லை. நோய் தென்பட்டவர்களின் விருப்பத்தின் பேரில் மேல் சிகிச்சைக்காக மதுரைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News