தஞ்சாவூர் அருகே 20 பள்ளி மாணவிகளுக்கு கொரோனா தொற்று உறுதி.!

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் அருகே உள்ள அம்மாபேட்டை பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 20 மாணவிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள சம்பவம் மற்ற மாணவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Update: 2021-03-13 12:43 GMT

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் அருகே உள்ள அம்மாபேட்டை பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 20 மாணவிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள சம்பவம் மற்ற மாணவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

12-ம் வகுப்பு படிக்கும் மாணவிகளுக்கு வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இன்று பள்ளிக்கு வந்த சில மாணவிகளுக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர்களை மருத்துவர்கள் பரிசோதனை செய்தனர். அப்போது 20 மாணவிகளுக்கும் கொரோனா பரிசோதனை நடைபெற்றது. இதில் மாணவிகளுக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து மாணவிகள் அனைவரும் தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அது மட்டுமின்றி பாதிக்கப்பட்ட பெண்களின் குடும்பத்தாரையும் தனிமைப்படுத்த சுகாதாரப்பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். மேலும், பள்ளி மூடப்பட்டு தொற்று பாதிக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Similar News