விழுப்புரம் அருகே கரை ஒதுங்கிய 20 டன் எடை கொண்ட ராட்சத திமிங்கலம்.!
விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே உள்ள எக்கியர் குப்பத்தில் சுமார் 20 டன் எடை கொண்ட ராட்சத திமிங்கலம் இறந்த நிலையில் கரை ஒதுங்கியுள்ளது. இது பற்றி வனத்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

மரக்காணம், எக்கியர் குப்பம் கடல் பகுதியில் 20 டன் எடை கொண்ட ராட்சத திமிங்கலம் அழுகிய நிலையில் கரை ஒதுங்கியுள்ளது. இதனை அப்பகுதி மீனவர்கள் கண்டு வனத்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர்.
இந்த தகவலை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற வனத்துறையினர் ராட்சத திமிங்கலத்தை பார்வையிட்டனர். கப்பல் மோதி இறந்திருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.