கௌரவ விரிவுரையாளர்களு 2000 பேருக்கு தகுதியே இல்லை - மீண்டும் சர்ச்சையை கிளப்பும் அமைச்சர் பொன்முடி

கௌரவ விரிவுரையாளர்களில் 2000க்கும் மேற்பட்டோருக்கு உரிய தகுதி இல்லை என அமைச்சர் பொன்முடி பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2022-10-13 05:07 GMT

கௌரவ விரிவுரையாளர்களில் 2000க்கும் மேற்பட்டோருக்கு உரிய தகுதி இல்லை என அமைச்சர் பொன்முடி பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

2000'க்கும் மேற்பட்ட கௌரவ விரிவுரையாளர்கள் உரிய தகுதி இல்லாமல் இருப்பதாக அமைச்சர் பொன்முடி கூறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக பணி நிரந்தரம் செய்ய கோரி கௌரவ விரிவுரையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட கௌரவ விரிவுரையாளர்கள் பணி நீக்கம் செய்யப்படுவார்கள் என கல்லூரி இயக்குனராகம் எச்சரிக்கை விடுத்தது.

இந்த நிலையில் அமைச்சர் பொன்முடி இது குறித்து விளக்கம் அளித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் கடந்த '10 ஆண்டுகள் இல்லாத வகையில் முதல் முறையாக 4000 விரிவுரையாளர்கள் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்ந்தெடுத்த நியமிக்கப்பட இருக்கிறோம். தற்போது அரசு மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பணியாற்றி வரும் கௌரவ உரிமையாளர்கள் நிரந்தர விரிவுரையாளர்களாக நியமிக்கப்படும் வரை பணியில் இருந்து நீக்கப்பட மாட்டார்கள். ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் தகுதி தேர்வில் வெற்றி பெறும் அவர்களுக்கு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளை பணியாற்ற ஆண்டுகளின் அடிப்படையில் நேர்முகத்தேர்வில் அதிகபட்சமாக 15 மதிப்பெண் வரை வழங்கப்படும்.

ஆனால் தற்போது உள்ள 5600 நபர்களில் 2000-க்கும் மேற்பட்டவர்கள் ஒரு விரிவுரையாளருக்கான தகுதி இல்லாமல் இருக்கிறார்கள்' என கூறினார். இது கல்லூரி விரிவுரையாளர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.


Source - Asinet News

Similar News