திருப்பூர்: 2 ஆயிரம் ஆண்டு பழமையான கோயிலில் முதுமக்கள் தாழியை பாதுகாக்கும் பக்தர்கள்!

திருப்பூர் மாவட்டம், காங்கயம் தாலுகா படியூர் சின்னாரிபட்டியில் அமைந்துள்ளது ஸ்ரீமங்களாம்பிகை உடனுறை மாதேசிலிங்கள் கோயில். இந்த கோயிலில் 103 டிகிரி தென்கிழக்காக நிர்மாணிக்கப்பட்டிருப்பதால் பிப்ரவரி 4 முதல் 25ம் தேதி வரை 22 நாட்கள், அக்டோபர் 16ம் தேதி முதல், நவம்பர் 8ம் தேதி வரையிலான 22 நாட்கள் என்று மொத்தம் 44 நாட்களில் மூலவர் மீது சூரிய ஒளி விழும்படி அமைக்கப்பட்டுள்ளது.

Update: 2021-11-30 02:19 GMT

இது மட்டுமின்றி 80 நாட்கள் நிலவின் ஒளியும் படுகின்ற வகையில் இந்த கோயில் கட்டுமானம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இங்கு ஸ்ரீசக்கரத்துடன் கூடிய மகாமேரு வளாகம், வாகனம் இல்லாமல் பைரவர் சன்னதியும் கூடுதலான சிறப்பு. அங்கு அமைக்கப்பட்டுள்ள நந்தியின் சிலையில் தமிழ் எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளது, தமிழர்களின் கல்வியறிவை தெரிய வைக்கிறது.

இந்த கோயிலில் சிறப்பு பற்றி திருப்பூர் வரலாற்று ஆய்வு மைய அமைப்பாளர் சிவதாசன் கூறுகையில், 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் கொங்கண சித்தரால் ஸ்ரீமாதேசிலிங்கம் கோயில் கட்டப்பட்டுள்ளது. இதன் பின்னர் மீண்டும் 10ம் நூற்றாண்டில் கோயிலை புனரமைத்துள்ளனர். அதற்கு அடுத்து சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்னர் பக்தர் ஒருவரால் கோயில் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த கோயிலில் கோடை காலத்திலும் வற்றாத சுனை நீர் உற்பத்தியாகிறது. அந்த நீரை கொண்டு சாமிக்கு அபிஷேகம் நடைபெறுகிறது. சுனை அமைந்துள்ள வடக்கே பழஞ்சாமி மாடம் என்று அழைக்கப்படும் இடத்தில் கொங்கண சித்தர் ஸ்தாபித்த சிலைகளும் இருக்கிறது. மேலும், கோயில் பகுதியில் சுமார் 2 ஆயிரம் ஆண்டு பழமையான முதுமக்கள் தாழி ஒன்றும் இன்றுவரை பாதுகாக்கப்பட்டு வருகிறது. எனவே இந்த கோயிலை தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் வைத்து பராமரிக்க வேண்டும். வரலாற்றை ஆவணப்படுத்தி வைப்பது சிறந்ததாகும். தமிழக அரசு உடனடியாக கோயிலை பராமரிப்பதற்கான வேலையில் ஈடுபட வேண்டும் எனவும் அவர் கோரிக்கை வைத்துள்ளார்.

Source, Image Courtesy: Maalaimalar

Tags:    

Similar News