20,000 மாஸ்க்குகள் எரிப்பு.. ராமநாதபுரம் காவலர் சாதனை.!

20,000 மாஸ்க்குகள் எரிப்பு.. ராமநாதபுரம் காவலர் சாதனை.!

Update: 2020-11-24 12:41 GMT

ராமநாதபுரத்தில் தலைமைக் காவலர் ஒருவர் பொதுமக்கள் பயன்படுத்திவிட்டு சாலைகளில் வீசியெறியும் முகக் கவசங்களை சேகரித்து தீயிட்டுக் கொளுத்தி வருகிறார். தலைமைக் காவலரின் தன்னலற்ற சேவையால் பலதரப்பினரிடமும் வரவேற்பைப் பெற்றுள்ளார்.


ராமநாதபுரம் தலைமைக் காவலராக பணிபுரிந்து வருகிறார், சீனிவாசன். வேலை நேரம் தவிர ஓய்வு வேளைகளில் பல்வேறு வித பொதுச் சேவைகளைச் செய்து வருகிறார். நீர்நிலைகளைச் சீரமைத்து சுத்தம் செய்வது, சீமைக் கருவேல மரங்களை அகற்றுவது, மரங்களில் அடிக்கப்படும் ஆணிகள் மற்றும் விளம்பரப் பதாகைகளை அகற்றுவது போன்ற பல்வேறு பொதுநலப் பணிகளைச் செய்து வருகிறார். இதற்காக மாவட்ட ஆட்சியர் மற்றும் முதலமைச்சர் என்று பலரிடமும் பாராட்டு சான்றிதழ் பெற்றுள்ளார்.


மேலும், சாலைகளில் சுற்றிதிரியும் ஆதரவற்ற முதியவர்கள் மற்றும் குழந்தைகளுக்கு உதவுவது, கல்வி உதவித் தொகை வழங்குவது போன்ற சமூக சேவைகளையும் செய்து வருகிறார்.


இந்நிலையில், பொதுமக்கள் பயன்படுத்திவிட்டுத் தூக்கியெறியும் முகக் கவசங்களைச் சேகரித்து அதனை எரித்து வந்துள்ளார். ஒவ்வொரு வீதியாகச் சென்று, நீண்ட குச்சியை பயன்படுத்தி பாதுகாப்பாக முகக் கவசங்களைக் சேகரிக்கும் தலைமை காவலர் சீனிவாசன் இதுவரை, 20,000க்கும் மேற்பட்ட முகக் கவசங்களை அழித்துள்ளார். தலைமைக் காவலரின் இந்த சேவை பொதுமக்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது. பலரும் அவரது சேவையைப் பாராட்டி வருகின்றனர்.

Similar News