20 லட்சம் தடுப்பூசிகள் வேண்டும்.. பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம்.!
ஏற்கனவே முதல் டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களுக்கு மீண்டும் இரண்டாவது டோஸ் தடுப்பூசி செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
தமிழகத்திற்கு தற்போது 20 லட்சம் தடுப்பூசிகளை அனுப்ப வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். இது தொடர்பாக அவர் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாவது: தமிழகத்தில் நாள் தோறும் 2 லட்சம் தடுப்பூசிகள் போடும் திட்டம் இருக்கிறது.
இதன் காரணமாக குறைந்தபட்சம் 10 நாட்களுக்கு தேவையான 20 லட்சம் தடுப்பூசிகளை உடனடியாக அனுப்பி வைக்க வேண்டும். தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி முகாம் நடத்துவதற்கு தினமும் 2 லட்சம் தடுப்பூசிகள் தேவைப்படுகிறது.
அது மட்டுமின்றி, ஏற்கனவே முதல் டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களுக்கு மீண்டும் இரண்டாவது டோஸ் தடுப்பூசி செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே அவர்களை காத்திருக்க வைக்காமல் அவர்களுக்கும் விரைந்து தடுப்பூசி போட உள்ளது. எனவே உடனடியாக தடுப்பூசி மருந்துகளை அனுப்பி வைக்க நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு முதலமைச்சர் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.