22 மாவட்டங்களில் வெப்பநிலை உயரும்: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்.!
தமிழகத்தில் கோடைக்காலம் தொடங்கிவிட்டது. இதனால் பல்வேறு மாவட்டங்களில் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக உள்ளது.
சென்னை உட்பட 22 மாவட்டங்களில் 20ம் தேதி முதல் மீண்டும் 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் உயரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கோடைக்காலம் தொடங்கிவிட்டது. இதனால் பல்வேறு மாவட்டங்களில் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக உள்ளது. இதனால் மக்கள் வீட்டை விட்டு செல்வதற்கு அச்சப்படும் நிலை உருவாகியுள்ளது. கடந்த ஒரு சில நாட்களாக ஆங்காங்கே பரவலாக மழை பெய்தது. இதனால் சற்று வெப்பம் குறைந்து குளிர்ச்சியான சூழல் உருவாகியது.
இந்நிலையில், சென்னை உட்பட 22 மாவட்டங்களில் 20 ஆம் தேதி முதல் மீண்டும் வெப்பநிலை உயரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. அந்த 22 மாவட்டங்களில் 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை அதிகரிக்கும் என கூறப்பட்டுள்ளது.