25 ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு.!
தமிழகத்தில் 25 ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளை இடமாற்றம் செய்து தலைமைச் செயலாளர் இறையன்பு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
தமிழகத்தில் 25 ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளை இடமாற்றம் செய்து தலைமைச் செயலாளர் இறையன்பு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
தமிழகத்தில் திமுக ஆட்சி வந்த பின்னர் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., அதிகாரிகளை அடிக்கடி இடமாற்றம் செய்து வருகிறது. இதனால் பலர் மனஉளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். கடந்த ஒரு மாத்தில் 100க்கும் மேற்பட்ட அதிகாரிகளை மாற்றம் செய்து வருகிறது.
இந்நிலையில், தற்போது 25 ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மதுரை மாநகராட்சி ஆணையராக கே.பி.கார்த்திகேயன், சேலம் மாநகராட்சி ஆணையராக கிறிஸ்துராஜ், சென்னை மாநகராட்சியின் (கல்வி) துணை ஆணையராக டி.சினேகா உள்ளிட்ட 25 அதிகாரிகள் பல்வேறு இடங்களில் மாற்றம் செய்யப்பட்டும், பதவி உயர்வு பெற்றும் உள்ளனர்.