2500 ஆண்டு பழமையான கோவில்.. கீழே கிடக்கும் கல்வெட்டுகள்.. கண்டுகொள்ளுமா ASI.?

2500 ஆண்டு பழமையான கோவில்.. கீழே கிடக்கும் கல்வெட்டுகள்.. கண்டுகொள்ளுமா ASI.?

Update: 2020-12-22 06:45 GMT

திருப்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ள 2000 ஆண்டுகள் பழமையானதாகக் கருதப்படும் சிவன் கோவிலில், கல்வெட்டுக்கள் கேட்பாரற்றுக் கிடப்பது பக்தர்களிடையே வேதனையை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூரில் இருந்து ஊத்துக்குளி செல்லும் வழியில் சுக்ரீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. ராமாயண காலத்தில் சுக்ரீவன் இங்கு லிங்கத்தை பிரதிஷ்டை செய்து வழிபட்டதால் சுக்ரீஸ்வரர் என்று பெயர் பெற்றதாக தல வரலாறு கூறுகிறது.

சுந்தரரால் பாடப்பெற்ற தலம் என்பதால் எட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக இருக்கும் என்று ஒருபுறம் கருதப்பட்டாலும், தற்போதுள்ள கோயிலுக்குக் கீழே புதைந்த நிலையில் மற்றொரு கோவில் கண்டுபிடிக்கப்பட்டதன் அடிப்படையில், இது 2500 ஆண்டுகளுக்கும் மேல் பழமை வாய்ந்தது என்று கருதப்படுகிறது. எனினும் நான்கு யுகங்களாக இந்தக் கோவிலில் வழிபாடு நடப்பதாக தலவரலாறு கூறுவது குறிப்பிடத்தக்கது.

கோவிலில் 1200ஆம் ஆண்டுக் காலத்தைச் சேர்ந்த கல்வெட்டுக்கள் இருப்பதால் 1952ஆம் ஆண்டு தொல்லியல் துறை தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தது. அப்போது கோவிலை புனரமைக்க முயற்சித்த போது தான் அடியில் புதைந்திருந்த கோவில் கண்டறியப்பட்டது. தற்போதுள்ள கோவிலின் அதே கட்டுமானத்தில் புதைந்த கோவிலும் அமைந்திருந்ததைக் கண்டு தொல்லியல் ஆய்வாளர்கள் ஆச்சரியமடைந்ததாகக் கூறப்படுகிறது.

இத்தகைய சிறப்பு வாய்ந்த கோவிலில் கல்வெட்டு ஒன்று பராமரிப்பின்றி மண்ணில் கிடப்பது பக்தர்கள் மத்தியில் வேதனையை ஏற்படுத்தியுள்ளது. கோவில் சுற்றுப் பிரகாரத்தில் உள்ள கல்வெட்டுகள் பாதுகாக்கப்படும் நிலையில், நிலைப்படி போன்ற தோற்றம் கொண்ட ஒரு கல்வெட்டு பராமரிப்பின்றி தரையில் கிடக்கிறது.

கல்வெட்டு கிடக்கும் இடத்தில் பாத்திரங்கள் கழுவி ஊற்றப்படுவதால் வேதனை அடைந்த்துள்ள பக்தர்கள், கல்வெட்டை பாதுகாக்க நடவடிக்கை எடுப்பதோடு, படியெடுத்து அதிலுள்ள தகவல்களை ஆவணப்படுத்த வேண்டும் என்று தொல்லியல் துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். வரலாற்றைப் பாதுகாப்பதன் முக்கியத்துவம் பற்றி நன்கு அறிந்த தொல்லியல் துறையே இப்படி அலட்சியமாக இருப்பது பக்தர்களிடையே வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

 

Source

https://www.maalaimalar.com/devotional/devotionaltopnews/2018/09/17143638/1191872/sukreeswarar-temple-in-tirupur.vpf 

 

https://m.dinamalar.com/detail.php?id=2674591 mage widget

Similar News