தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு? தலைமைச் செயலாளர் இன்று அவச ஆலோசனை.!
கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தலைமை செயலாளர் இன்று ஆலோசனை நடத்துகிறார்.
கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தலைமை செயலாளர் இன்று ஆலோசனை நடத்துகிறார்.
சீனாவில் உருவான கொரோனா வைரஸ் தொற்று உலகம் முழுவதும் தனது கோர முகத்தை காட்டியது. இந்த வைரஸ் இந்தியாவையும் விட்டு வைக்கவில்லை. கடந்த மார்ச் மாதம் பரவத்தொடங்கிய கொரோனா வைரஸ் தொற்று படிப்படியாக அதிகரித்து இந்தியாவில் பல லட்சம் உயிர்களை காவு வாங்கியது. இந்திய மருத்துவ விஞ்ஞானிகள் இரவு பகலாக உழைத்து தடுப்பு மருந்துகளை உருவாக்கினர்.
இதனிடையே தடுப்பூசி முதற்கட்டம் மற்றும் இரண்டாம் கட்டமாக பொதுமக்களுக்கு போடப்பட்டு வருகிறது. மேலும், சில மாநிலங்களில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது.
இந்நிலையில், தமிழக தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன் இன்று காலை 11 மணிக்கு மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை மேற்கொள்கிறார். தமிழகத்தில் கொரோனா அதிகரித்து வரும் சூழ்நிலையில் அவசர ஆலோசனை நடத்துகிறார். கடந்த 24 மணி நேரத்தில் 800க்கும் அதிகமானோர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் மாவட்ட ஆட்சியர்களுடன் இன்று தலைமைச்செயலாளர் ஆலோசனை நடத்துகிறார்.
இந்த ஆலோசனையில் தொற்று பரவலை எப்படி கட்டுப்படுத்துவது, மற்றும் பொதுமுடக்கம் அமல்படுத்தலாமா? அல்லது வார கடைசியில் மட்டும் அமல்படுத்தலாமா என்பனவை இதில் கலந்தாலோசிக்கப்படும் என கூறப்படுகிறது. ஏற்கெனவே மகாராஷ்டிரா மாநிலத்தில் சில நகரங்களில் 2ம் கட்ட ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதே போன்று தமிழகத்திலும் சில மாவட்டங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்படலாம் என கூறப்படுகிறது.