3 ஆண்டாக பூட்டப்பட்ட சிக்கூர் பசுவேஸ்வரர் கோயில் - களத்தில் இறங்கிய இந்து முன்னணி!

Update: 2022-05-05 14:42 GMT

கடந்த 3 ஆண்டுகளாக பூஜையின்றி கடந்த சிக்கூர் பசுவேஸ்வரர் கோயிலில் மீண்டும் இந்து முன்னணி முயற்சியால் திறக்கப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகே கடம்பூர் மலைப் பகுதி சிக்கூரில் சுமார் 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த பசுவேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. அக்கோயிலில் கிராமத்தில் உள்ள கால்நடைகள் மற்றும் மனிதர்கள் நோய் நொடியின்றி வாழ்வதற்காக விழா நடைபெறுவது வழக்கம்.

ஆனால் கோயில் நிலம் பிரச்சினை காரணமாக இரண்டு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டு கடந்த 3 ஆண்டுகளாக பூஜையின்றி, வழிபாடுகள் அனைத்தும் நிறுத்தப்பட்டது. இதனால் அந்த கிராமத்தில் உள்ள கால்நடைகள் மற்றும் மக்களுக்கு அடிக்கடி பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. இதனால் மீண்டும் கோயிலை திறந்து வழிப்பாடுகள் நடத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.

இந்நிலையில், இந்து முன்னணி கோயில் திறப்பதற்காக, இரண்டு தரப்பு மக்களிடையே பேசி சுமூக முடிவு எட்டியது. இதனால் மீண்டும் பசுவேஸ்வரர் கோயில் பக்தர்கள் பூஜையிட்டு திறந்தனர். இதனால் அனைத்து பக்தர்களும் உற்சாகத்துடன் கோயிலை வழிப்பட்டனர். இந்த கோயில் திறப்பால் அங்குள்ள விவசாயம் செழிப்பது மட்டுமின்றி கால்நடைகள், மக்கள் அனைவரும் நோய் நொடியின்றி வாழ்வார்கள் என்று அந்த கிராம மக்கள் கூறி வருகின்றனர்.

Source, Image Courtesy: Dinamani

Tags:    

Similar News