திருப்பூர்: சட்ட விரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தை சேர்ந்த 3 பேர் கைது.. போலி ஆதார் அட்டைகள் பறிமுதல்.!

அந்த 3 பேர் கடந்த 5 ஆண்டுகளாக திருப்பூரில் பல்வேறு பனியன் கம்பெனிகளில் வேலை பார்த்து வந்தது தெரியவந்துள்ளது.

Update: 2021-06-24 12:37 GMT

திருப்பூரில் சட்டத்திற்கு புறம்பாக தங்கியிருந்த வங்கதேசத்தை சேர்ந்த 3 பேரை கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம் ஒரு தொழில் நகரம் என்று கூறலாம். அங்கு பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்கள் தொழில் சம்மந்தமாக வருவது உண்டு. அப்படி வருபவர்கள் சட்டத்திற்கு புறம்பாக அங்கேயே நிரந்தரமாக போலியான ஆவணங்களில் பதுங்கி விடுகின்றனர். இது போன்றவர்களை களையெடுக்க மத்திய அரசு பல்வேறு யுக்திகளை கையாண்டு வருகிறது.




 


இந்நிலையில், திருப்பூரில் வங்கதேசத்தை சேர்ந்தவர்கள் சட்டத்திற்கு புறம்பாக தங்கியிருப்பதாக மத்திய உளவுத்துறை மற்றும் கியூ பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலை தொடர்ந்து கியூபிரிவு போலீசார் அனுப்பர்பாளையம் பகுதியில் சோதனை நடத்தினர். அப்போது ஷிமுல் காஸி 30, மன்னன் மோல்லல் 31, சைஃபுல் இஸ்லாம் 40, ஆகியோரை பிடித்து விசாரணை நடத்தப்பட்டது.

அவர்கள் அனைவரும் வங்கதேசத்தை சேர்ந்தவர்கள் என விசாரணையில் தெரியவந்தது. மேலும், உரிய ஆவணங்கள் இன்று சட்டத்திற்கு புறம்பாக, இந்திய ஆதார் அட்டைகள் தயார் செய்து குடியேறியது தெரியவந்துள்ளது. அந்த 3 பேர் கடந்த 5 ஆண்டுகளாக திருப்பூரில் பல்வேறு பனியன் கம்பெனிகளில் வேலை பார்த்து வந்தது தெரியவந்துள்ளது.

Similar News