திருச்சி பிஷப் கைவரிசை! ஆசிரியர் வேலை வாங்கி தருவதாக ரூ.3 கோடி சுருட்டல்!
மதுரை கிரம்மாபுரம் பகுதியை சேர்ந்த ரமேஷ்குமார், தமிழ் சுவிசேஷ லுத்தரன் சபையின் உறுப்பினராக இருந்து வருகிறார். அது திருச்சியை தலைமையிடமாக கொண்டு செயல்படுகிறது. சமீபத்தில் ரமேஷ்குமார், திருச்சி மாநகர போலீஸ் கமிஷனரை சந்தித்து புகார் மனு கொடுத்தார்.
திருச்சி பிஷப் மார்ட்டின் சர்ச் தேவைகளுக்கு ரூ.1½ கோடி ஏற்பாடு செய்து கொடுத்தால், திருச்சபையின் கட்டுப்பாட்டில் உள்ள பள்ளிகளில் ஆசிரியர் பணி நியமனம் பெற்றுத்தருவதாகவும் தெரிவித்தார். அவர் சொன்னதை நம்பி ரமேஷ்குமார் பணத்தை கொடுத்துள்ளார். ஆனால் அவர்கள் உறுதியளித்தபடி ஆசிரியர் பணி நியமனம் பெற்றுத்தரவில்லை. அதே போல மீண்டும் ரூ.1½ கோடி கொடுத்தால் கட்டாயம் வாங்கி தருவதாக கூறியுள்ளனர்.
ஆனால் ஆசிரியர் பணி பெற்றுத்தராமல் ஏமாற்றி ரூ.3 கோடியை மோசடி செய்துவிட்டனர். பிஷப் மார்ட்டின், ஜீவஜோதி, ஹென்றி ராஜசேகர் ஆகியோர் மீது நடவடிக்கை வேண்டும் எனவும், ரூ.3 கோடியை பெற்றுத்தர வேண்டும் எனவும் ரமேஷ்குமார் புகார் அளித்தார். அவர்கள் மீதான குற்றச்சாட்டு உறுதியானது.
பிஷப் மார்ட்டின், ஜீவஜோதி, ஹென்றி ராஜசேகர் ஆகிய 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடி வருகின்றனர்.
Inputs From: Dailythanthi