தமிழகத்தில் இன்று முதல் 3 நாட்கள் தடுப்பூசி திருவிழா.!
தமிழகத்தில் தினமும் ஒரு லட்சத்துக்கு 25 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இதனையடுத்து தினமும் 2 லட்சமாக உயர்த்த சுகாதாரத்துறை திட்டமிட்டுள்ளது.
தமிழகத்தில் இன்று முதல் 3 நாட்களுக்கு தடுப்பூசி திருவிழா நடைபெறுகிறது. கொரோனா தொற்று அதிகரித்து வரும் சூழ்நிலையில், பிரதமர் மோடி அனைவருக்கும் தடுப்பூசி போட வேண்டும் எனவும், அதற்காக திருவிழா நடைபெறும் எனவும் கூறியிருந்தார். அதன்படி நாடு முழுவதும் தடுப்பூசி திருவிழா தொடங்கப்பட்டுள்ளது.
அதன்படி தமிழகத்தில் தினமும் ஒரு லட்சத்துக்கு 25 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இதனையடுத்து தினமும் 2 லட்சமாக உயர்த்த சுகாதாரத்துறை திட்டமிட்டுள்ளது.
இதற்காக அரசு மருத்துவக் கல்லூரிகள், அரசு மருத்துவமனைகள், மாவட்ட தலைமை மருத்துவமனைகள், நகர்புற மற்றும் கிராமப்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அது மட்டுமின்றி 1,900 மினி கிளினிக்குகள், மற்றும் தனியார் மருத்துவமனைகள் உளளிட்ட 4,328 மையங்களில் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகின்றது குறிப்பிடத்தக்கது.