திருப்போரூர் அருகே நீரில் மூழ்கி 3 சிறுமிகள் உயிரிழப்பு.!
திருப்போரூர் அருகே நீரில் மூழ்கி 3 சிறுமிகள் உயிரிழப்பு.!
திருப்போரூர் அருகேயுள்ள ஆலத்தூர் கிராமத்தில் ஊர் பொது குளத்தில் மூழ்கி 3 சிறுமிகள் உயிரிழந்த சம்பவம் கிராம மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் அடுத்த ஆலத்தூர் கிராமத்தில் ஊர் பொது குளம் உள்ளது. இந்த குளத்தில் அதே பகுதியை சேர்ந்த ஹரிசங்கர் என்பவரின் மகள்கள் ராகிணி 6, ரம்யா 4, இதே போன்று விஜயக்குமார் என்பவரின் மகள் சாதனா 5, ஆகிய 3 சிறுமிகளும் குளத்திற்கு குளிக்க சென்றுள்ளனர்.
அப்போது சிறுமிகள் ஆழமான பகுதிக்கு சென்றதால், தண்ணீரில் மூழ்கியுள்ளனர். சிறுமிகளின் அலறல் சத்தம் கேட்டு அருகாமையில் இருந்தவர்கள் குளத்தில் இறங்கி 3 சிறுமிகளையும் மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
மருத்துவனையில் சிறுமிகளை மருத்துவர்கள் பரிசோதனை நடத்தினர். அப்போது வரும் வழியிலேயே சிறுமிகள் இறந்து விட்டனர் என கூறியுள்ளனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரே கிராமத்தில் 3 சிறுமிகள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.