சென்னையில் குற்றங்களை தடுக்க உதவும் 3 லட்சம் கேமராக்கள்.!

சென்னையில் குற்றங்களை தடுக்க உதவும் 3 லட்சம் கேமராக்கள்.!

Update: 2021-01-04 14:03 GMT

சென்னை மாநகரில் குற்றங்களை கட்டுப்படுத்தவும், குற்றவாளிகளை கைது செய்யவும் கேமராக்கள் பெரிதும் கைகொடுத்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

சென்னை மாநகர போலீஸ் கமிஷ்னராக ஏ.கே.விஸ்வநாதன் இருந்த போதுதான் சென்னையில் அதிக இடங்களில் கேமராக்கள் நிறுவப்பட்டது.
கடந்த 2016ம் ஆண்டு ஜூலை வரையில் சுமார் 850 போக்குவரத்து சந்திப்புகளில் கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்தது. அதன் பின்னர் அரசு கட்டிடங்களில் 2,300 கேமராக்கள் இருந்தன.

இதன் பின்னர் அது படிப்படியாக உயத்தப்பட்டது. 2016-ம் ஆண்டு ஆகஸ்டு மாதத்தில் இருந்து டிசம்பர் வரையில் மட்டும் 30 ஆயிரம் கேமராக்கள் சென்னை மாநகரில் அமைக்கப்பட்டது. இதனால் கேமராக்களின் எண்ணிக்கை படிப்படியாக உயர்ந்தது. 2017ம் ஆண்டு சென்னையில் உள்ள கேமராக்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 35 ஆயிரமானது. 2018-ம் ஆண்டு 2 லட்சத்து 30 ஆயிரமாகவும், 2019ம் ஆண்டு 2 லட்சத்து 80 ஆயிரமாக அது உயர்த்தப்பட்டது. இதன் மூலம் கேமராக்களின் எண்ணிக்கை 3 லட்சமாக உயரும் நிலை ஏற்பட்டுள்ளது.

இது போன்ற கேமராக்கள் பொருத்துவதினால் பல குற்றங்கள் தடுக்கப்பட்டுள்ளது. மேலும், தடயங்கள் இல்லாத வழக்குகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் மூலம் குற்றவாளிகளை அடையாளம் கண்டுள்ளனர்.

கொலை, கொள்ளை, வழிப்பறி போன்ற குற்ற வழக்குகளிலும், அடிதடி மோதல் சம்பவங்களின் போதும் சம்பவ இடங்களுக்கு செல்லும் போலீசார் முதலில் அப்பகுதியில் கேமரா இருக்கிறதா? என்பதை பார்ப்பார்கள். குற்ற சம்பவம் நடந்த ஓரிடத்தில் கேமரா இருந்தால் போதும், துப்பு துலக்குவது எளிதாகிவிடும் என்று போலீசார் பல முறை நம்பிக்கையும் தெரிவித்துள்ளனர்.

Similar News