தமிழகத்திற்கு மேலும் 3 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் வந்தடைந்தது.!
புனேவிலிருந்து விமானம் மூலம் மேலும் 3 லட்சம் டோஸ் கொரோனா தடுப்பூசிகள் தமிழகத்திற்கு வந்துள்ளது.
புனேவிலிருந்து விமானம் மூலம் மேலும் 3 லட்சம் டோஸ் கொரோனா தடுப்பூசிகள் தமிழகத்திற்கு வந்துள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம், புனேவில் உள்ள மத்திய மருந்து சேமிப்பு கிடங்கிலிருந்து 3 லட்சம் டோஸ் கோவிஷீல்டு தடுபூசிகளை, தமிழகத்திற்கு மத்திய சுகாதாரத்துறை அனுப்பி வைத்துள்ளது.
இந்த தடுப்பூசிகள் புனேவில் இருந்து விமானம் மூலம் நேற்று சென்னை வந்தடைந்தது. இந்த மருந்துகளை தமிழக அரசு அதிகாரிகளிடம் ஒப்படைத்தது மத்திய அரசு. இதன் பின்னர் போலீஸ் பாதுகாப்புடன் அங்கிருந்து தடுப்பூசி பார்சல்களை, எடுத்துக் கொண்டு தேனாம்பேட்டையில் உள்ள மாநில மருந்து கிடங்கிற்கு எடுத்து சென்றனர்.
இந்த மருந்துகள் அனைத்தும் மாவட்ட வாரியாக பிரித்து அனுப்பப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.