30 கோடி மதிப்புள்ள நிலத்தை ஆக்கிரமித்த தி.மு.க கவுன்சிலர்: அதிகாரப் பதவியில் தொடரும் அட்டூழியங்கள்!

30 கோடி மதிப்பு மிக்க நிலத்தை திமுக கவுன்சிலர் தன்னுடைய அதிகார பதவியை கொண்டு ஆக்கிரமித்து இருக்கிறார்.

Update: 2023-03-15 03:41 GMT

போலி ஆவணங்கள் மூலமாக சுமார் 30 கோடி மதிப்பு மிக்க நிலத்தை திமுக கவுன்சிலர் அபகரித்து இருக்கும் செயல் தற்பொழுது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக வெளியிடப்பட்ட செய்தி குறிப்பில், தமிழகத்தில் தி.மு.க ஆட்சி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மக்களுக்கு நன்மை தரும் வகையில் நடைபெறுகிறதோ, இல்லையோ தங்களுடைய அதிகாரி பதவிகளைக் கொண்டு மக்களுடைய நிலங்களை ஆக்கிரமிக்கும் முயற்சி பெருமளவில் நடைபெற்று வருகிறது.


அந்த வகையில் தி.மு.க ஆட்சியில் கவுன்சிலரின் அட்டூழியங்கள் தொடர்கதையாக இருந்து வருகிறது. பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி இருக்கிறார்கள். கவுன்சிலர்களால் பாதிக்கப்பட்ட மக்கள் காவல் நிலையத்திற்கு சென்றாலும் அவர்களுக்கு உரிய தீர்வு தற்போது வரை கிடைக்கவில்லை. இப்படிப்பட்ட சூழ்நிலையில் தான் காஞ்சிபுரம் மாவட்டம் மாங்காடு நகராட்சியில் 20 வது வார்டு தி.மு.க கவுன்சிலராக இருப்பவர் வெங்கடேசன். இவர் சுமார் 30 கோடி மதிப்புமிக்க ஒரு நிலத்தை அபை செய்திருக்கும் சம்பவம் தற்போது விட்ட வெளிச்சத்திற்கு வந்து இருக்கிறது.


இது தொடர்பாக பல்வேறு நில உரிமையாளர்கள் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் கூறப்பட்டு இருக்கிறது. போலி ஆவணங்கள் மூலமாக அவர் அந்த நிலத்தை தனக்கு சொந்தம் போல் தற்பொழுது கொண்டாடுகிறார். போலி ஆவணங்களை காட்டி 30 கோடி மதிப்புள்ள நிலத்தை தி.மு.க கவுன்சிலர் அபகரித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

Input & Image courtesy: Mediyaan

Tags:    

Similar News