தமிழகத்தில் டெங்குவால் 3,187 பேர் பாதிப்பு: அதிர்ச்சி தகவலை வெளியிட்ட சுகாதாரத்துறை அதிகாரி!
தமிழகத்தில் கடந்த 2021 ஜனவரி முதல் தற்போது வரை 3,187 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரி கூறியுள்ளார்.
தமிழகத்தில் கடந்த 2021 ஜனவரி முதல் தற்போது வரை 3,187 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரி கூறியுள்ளார். மதுரை அரசு இராஜாஜி தலைமை மருத்துவமனையில் கட்டப்பட்டு வரும் கட்டடங்கள் குறித்து சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் இன்று ஆலோசனை நடத்தினார். இதில் மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர் மற்றும் டீன் ரத்தினவேல் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று குறைந்து வருகிறது. தற்போது சென்னை, கோவையில் மட்டுமே 100க்கும் மேற்பட்டோர்களுக்கு தொற்று பதிவாகி வருகிறது. தொடர்ந்து மாநில அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது.
மேலும், தமிழகத்தில் அச்சுறுத்தி வரும் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. தற்போது டெங்கு காய்ச்சலால் 3 பேர் உயிரிழந்துள்ளனர். அதே போன்று 3,187 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றார்.
Source, Image Courtesy: News 7 Tamil