நான்கு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு !

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: வங்க கடலில், வடக்கு ஒடிசா கடலோர பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலை கொண்டுள்ளது. இது, மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக இன்று வலுவிழக்கும். இதன் காரணமாக மீனவர்கள் மத்திய மற்றும் அதனையொட்டிய தெற்கு வங்க கடல் பகுதிக்கு செல்ல வேண்டாம்.

Update: 2021-09-14 04:43 GMT

நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இன்று, இடி மற்றும் மின்னலுடன் கனமழை பெய்யும். மற்ற மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கிறது.

மேலும், கோவை மாவட்டத்தை பொறுத்தவரையில் நாளை ஒரு சில இடங்களில் கனமழையும், மற்ற மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்யும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Source, Image Courtesy: Dinamalar

Tags:    

Similar News