மீன் வளர்ப்புக்கு 40 சதவீதம் மானியம் - உறுதியான வருவாய் கிடைப்பதற்கான தேசிய விவசாய மேம்பாட்டுத் திட்டம்.!

மீன் வளர்ப்புக்கு 40 சதவீதம் மானியம் - உறுதியான வருவாய் கிடைப்பதற்கான தேசிய விவசாய மேம்பாட்டுத் திட்டம்.!

Update: 2020-10-27 20:29 GMT

தேசிய வேளாண் மேம்பாட்டுத் திட்டம் மூலம் விவசாயிகளுக்கு அனைத்து பருவங்களிலும் உறுதியான வருமானம் கிடைக்கும். வேளாண்மை மற்றும் அதனுடன் தொடர்புடைய துறைகளுக்கு புத்துயிர் அளிப்பதற்காக 11-வது ஐந்தாண்டு திட்டத்தின் தொடக்கத்திலிருந்து சிறப்பு கூடுதல் உதவித் திட்டத்துடன் மத்திய அரசால் தேசிய வேளாண் மேம்பாட்டுத் திட்டம் தொடங்கப்பட்டது.

12-வது ஐந்தாண்டு திட்ட காலத்தில், மாவட்ட வேளாண் திட்டங்கள், மாநில வேளாண் திட்டம் மற்றும் மாநில வேளாண் உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டம் ஆகியவற்றை உருவாக்க மாநில அரசுகள் கேட்டுக் கொள்ளப்பட்டன. மாநில வேளாண் உள்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் முக்கிய நோக்கம், தமிழ்நாட்டில் விவசாயம் மற்றும் அதனுடன் தொடர்புடைய துறைகளில் விவசாய மேம்பாட்டுக்கான உள்கட்டமைப்பை அடையாளம் காண்பதாகும்.

தமிழ்நாட்டில், உள்நாட்டு மீன் உற்பத்தி பெரும்பாலும் இந்திய கார்ப் மீன்களை வளர்ப்பதை மையமாகக் கொண்டுள்ளது. பெரும்பாலான குளங்கள் மழைப்பொழிவால் நிரம்புகின்றன. மற்றும் ஐந்து மாதங்களில் நான்கு மதங்கள் மட்டுமே குளங்கள் மழை நீரால் நிரம்பி இருப்பது நீடிக்கும்.



தமிழக அரசின் மீன்வளத்துறை, அரசு மீன் விதை பண்ணைகளில் கிஃப்ட் திலபியா மீன் குஞ்சுகளை உற்பத்தி செய்து மாவட்ட மீன்வளத் துறைகள் மூலம் விவசாயிகளுக்கு விநியோகிக்கப்படுகிறது. மாநிலத்தில், சாத்தானூர், ஆலையார், அமராவதி, பாலார், போரண்டலார் உள்ளிட்ட நீர்த்தேக்கங்களில் மீன் விதை பண்ணைகள் பராமரிக்கப்படுகின்றன. தரமான மீன் விதைகள் இந்த நீர்த்தேக்கங்களில் சேமிக்கப்பட்டு மீன்வள அலுவலகங்கள் மூலம் விநியோகிக்கப்படுகின்றன.

 பண்ணை குளங்களை அமைப்பதற்கும், மரபணு ரீதியாக மேம்படுத்தப்பட்ட திலபியா கிஃப்ட் மீன்களை வளர்ப்பதற்கும் 40 சதவீதம் மானியம் வழங்கப்படுகிறது. ஒரு பண்ணைக்குளத்திற்கு, மொத்த செலவு தொகையான ரூ.99 ஆயிரத்தில், 40 சதவீத மானியமாக ரூ.39,600 வழங்கப்படுகிறது. பண்ணைக்குளம் அமைப்பதற்கான மானியமாக ரூ.16000, உள்கட்டமைப்பு மற்றும் கட்டுமானத்திற்கான மானியம் ரூ.23600-ம் இதில் அடங்கும்.

பண்ணைக்குளங்கள் மழைநீரை சேமித்து, வறண்ட மாதங்களில் நீர்ப்பாசனத்திற்கு தொடர்ந்து நீர் வழங்குவதை உறுதி செய்கின்றன. உள்நாட்டு மீன் வளர்ப்பு, விவசாயிகளுக்கு உறுதியான கூடுதல் வருமானத்தை அளிக்கும், மேலும் 2022-ஆம் ஆண்டுக்குள் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவதற்கு இது உறுதியான ஒரு செயல்திட்டமாகும்.

 

Similar News