கடந்த 5 ஆண்டில் 40 ஆயிரம் ஹெக்டேர் கோயில் நிலம் மீட்பு.. அறநிலையத்துறை அமைச்சர் தகவல்.!

கடந்த 5 ஆண்டில் 40 ஆயிரம் ஹெக்டேர் கோயில் நிலம் மீட்பு.. அறநிலையத்துறை அமைச்சர் தகவல்.!

Update: 2021-01-11 18:31 GMT

கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் கோயில் நிலங்களை ஆக்கிரமித்தவர்களைக் கண்டறிந்து சுமார் 40 ஆயிரம் ஹெக்டேர் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் கூறியுள்ளார்.

திண்டுக்கல் மாவட்டம், சீலப்பாடியில் இந்துசமய அறநிலையத்துறையின் இணை ஆணையர் அலுவலக புதிய கட்டிடம் திறப்பு விழா நடைபெற்றது. 
இந்த நிகழ்ச்சியில் அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன், வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோர் இணைந்து புதிய கட்டிடத்தை திறந்து வைத்தனர்.

இதனிடையே அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் பேசுகையில், அறநிலையத்துறை தொடங்கப்பட்ட காலத்தில் 10 ஆயிரத்திற்கும் குறைவான கோயில்கள் மட்டுமே இருந்தது. ஆனால் தற்போது அறநிலையத்துறையின் கீழ் 40 ஆயிரம் கோயில்கள் உள்ளது. மேலும் அவர் பேசுகையில், கடந்த 5 ஆண்டுகளில் கோயில் நிலங்களை ஆக்கிரமித்தவர்களை படிப்படியாக கண்டறிந்து சுமார் 40 ஆயிரம் ஹெக்டேர் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளது. வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்ட சிலைகள் அனைத்தும் மீட்கப்படும். லண்டனில் இருந்து சிலைகள் மீட்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
 

Similar News