சென்னையில் 47 சதவீதம் மழை பெய்துள்ளது.. வானிலை மையம் தகவல்.!

சென்னையில் 47 சதவீதம் மழை பெய்துள்ளது.. வானிலை மையம் தகவல்.!

Update: 2020-12-09 18:19 GMT

தமிழகத்தில் இரு புயல் காரணமாக கனமழை பெய்து வருகிறது. அதன்படி சென்னையில் வடகிழக்குப் பருவமழை 47 சதவீதம் அளவிற்கு பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருப்பதாவது:

அக்டோபர் 1ம் தேதி முதல் இன்றைய நாள் வரை தமிழகத்தில் பெய்ய வேண்டிய மழையளவு 39.6 செ.மீ. ஆகும். ஆனால், இதே காலக்கட்டத்தில் இந்த ஆண்டு பெய்திருக்கும் மழை அளவானது 43.1 செ.மீ. ஆகும். எனவே, தமிழகத்தைப் பொறுத்தவரை வடகிழக்குப் பருவ மழை 9 சதவீதம்  அதிகமாகப் பெய்துள்ளது.

சென்னையில் வடகிழக்குப் பருவமழை இயல்பை விட 47 சதவீதம் அதிகமாக பெய்துள்ளது. இந்த ஆண்டு வடகிழக்குப் பருவமழை காலத்தில் சென்னையில் பெய்திருக்கும் மழையளவானது 102.9 செ.மீ. ஆகும்.

வடகிழக்குப் பருவக் காற்று காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்துக்கு இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.

Similar News