தடுப்பூசி போடுவதற்கு 47,209 மையங்கள் தயார்.. அதிமுக எம்.பி., ரவிந்திரநாத் பேச்சு.!

தடுப்பூசி போடுவதற்கு 47,209 மையங்கள் தயார்.. அதிமுக எம்.பி., ரவிந்திரநாத் பேச்சு.!

Update: 2020-12-05 19:14 GMT

கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்து மக்கள் பயன்பாட்டுக்கு சில நாடுகள் கொண்டு வந்துள்ளது. அதே போன்று இந்தியாவிலும் 3 தடுப்பூசிகள் இறுதிக்கட்ட பரிசோதனையில் உள்ளது. பிரதமர் மோடி கொரோனா தடுப்பூசி கண்டறியும் பணிக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து தனியாக கவனமும் செலுத்தி வருகிறார் என்பது அனைவருக்கும் தெரியும்.

மேலும், தடுப்பூசி தயாரிக்கும் நிறுவனங்களுக்கு நேரில் சென்று பார்வையிட்டு நிலவரம் பற்றி கேட்டறிந்தும் வருகிறார். அங்குள்ள விஞ்ஞானிகளையும் ஊக்கப்படுத்தி வருகிறார். இதனிடையே பிரதமர் மோடி அனைத்து கட்சி எம்.பி.,களுடன் பேச்சு வார்த்தை நடத்தினார். கொரோனா தடுப்பூசி முதலில் எத்தனை பேருக்கு போடுவது. அதற்கு தற்போது நாடு முழுவதும் உள்ள மருத்துவமனையில் இடவசதி தனியாக ஒதுக்கப்பட்டுள்ளதா என்பன பற்றி விரிவாக பேசப்பட்டது.


இந்த கூட்டத்தில் அ.தி.மு.க. சார்பில் ப.ரவீந்திரநாத் எம்.பி. பேசினார். அப்போது அவர் கூறியதாவது: கொரோனாவிற்கு எதிரான போரில் முன் கள வீரர்களாக நின்ற மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்கள், காவல் துறையினர், தூய்மைப் பணியாளர்கள் மற்றும் அரசின் அனைத்து துறைகளின் அர்ப்பணிப்பு மிகுந்த பணியை நினைவு கூர்வது இந்த தருணத்தில் மிக முக்கியமானது. மேலும், “ஜன் அந்தோலன் பிரசாரம்“ மூலம் மாநிலம் முழுவதும் கொரோனா நோய் தொற்று குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

எளிய மக்கள் மருத்துவ வசதி பெறுவதற்காக மாநிலம் முழுவதும் 2 ஆயிரம் “மினி கிளினிக்கு”கள் தொடங்கப்பட்டுள்ளன. கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவது தொடர்பான அனைத்து நடவடிக்கைகளையும், ஆய்வுகளையும் முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர், அதிகாரிகள் மாவட்டம் தோறும் செய்து வருகிறார்கள். இன்றைக்கு கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 11 ஆயிரத்திற்கும் குறைவாகவே தமிழ்நாட்டில் உள்ளது.

மத்திய அரசின் வழி காட்டுதலின்படி அனைவருக்கும் அறிவிக்கப்பட்டுள்ள முன்னுரிமை அடிப்படையில் கொரோனா தடுப்பூசி வழங்கிட தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. ஒவ்வொரு கட்டமாகவே கொரோனா தடுப்பூசிகள் வழங்கப்படும் என்றாலும் 3 கோடி டோஸ் அளவுக்கான மருந்துகளை இருப்பு வைத்துக் கொள்ளும் வகையில் நடமாடும் 51 குளிரூட்டிகள் மாவட்டம்தோறும் அமைக்கப்பட்டுள்ளது. 42 ஆயிரத்து 209 தடுப்பூசி போடும் மையங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் பேசினார்.

Similar News