48 நாட்கள்.. யானைகளுக்கு சிறப்பு நலவாழ்வு முகாம்.. தமிழக அரசு உத்தரவு.!

48 நாட்கள்.. யானைகளுக்கு சிறப்பு நலவாழ்வு முகாம்.. தமிழக அரசு உத்தரவு.!

Update: 2021-01-28 17:15 GMT

பவானி ஆற்றுப்படுகையில் 48 நாட்களுக்கு யானைகளுக்கு சிறப்பு நலவாழ்வு முகாம் நடைபெறும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

கோவை மாவட்டம் தேக்கம்பட்டி அருகே உள்ள பவானி ஆற்றுப்படுகையில் வருடம்தோறும் யானைகள் புத்துணர்வு முகாம் நடைபெறும். முதன் முதலாக தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா யானைகளுக்கு என்று சிறப்பு நலவாழ்வு முகாமை தொடங்குவதற்கு ஆணைப்பிறப்பித்தார்.

அவரது உத்தரவுக்கு பின்னர் தமிழகத்தில் வருடம்தோறும் யானைகள் நலவாழ்வு முகாம் நடைபெற்று வருகிறது. தமிழக அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இந்த முகாம் நடைபெறும். தமிழகம் முழுவதும் உள்ள கோயில்களில் உள்ள யானைகள் அனைத்தும் ஒரே இடத்திற்கு வரவழைக்கப்பட்டு, அதற்கு பிடித்தமான உணவுகள் அளிக்கப்படும். அனைத்து யானைகளும் புத்துணர்ச்சியுடன் விளையாடி மகிழும்.

இந்த சிறப்பு நலவாழ்வு முகாம் 48 நாட்களுக்கு நடைபெறும். இந்த முகாமில் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில் யானைகளுக்கு மட்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Similar News