தமிழகத்தில் 4ம் கட்ட மெகா தடுப்பூசி முகாம் தொடங்கியது !
தமிழகத்தில் இன்று (அக்டோபர் 3) நான்காம் கட்ட தடுப்பூசி முகாம் தொடங்கி நடைபெற்று வருகிறது. கொரோனா பெருந்தொற்றை தடுக்கும் வகையில் பிரதமர் மோடி அனைவருக்கும் இலவசமாக தடுப்பூசி போடப்படும் என்று அறிவித்தார். அவரது அறிவிப்புக்கு பின்னர் இந்தியா முழுவதும் தடுப்பூசி போடும் பணியானது வேகமாக நடைபெற்று வருகிறது.

அதன்படி தமிழத்திலும் தடுப்பூசி போடும் பணி வேகப்படுத்தப்பட்டுள்ளது. இதில் சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு ஒரே நாளில் 20 லட்சத்துக்கும் மேற்பட்டோர்களுக்கு தடுப்பூசி போடப்படுகிறது.
கடந்த செப்டம்பர் 12ம் தேதி முதல் கட்ட தடுப்பூசி முகாம் நடைபெற்றது. அதில் 28.91 லட்சம் பேருக்கும், 19ம் தேதி நடந்த 2ம் கட்ட தடுப்பூசி முகாமில் 16.41 லட்சம் பேருக்கும், 26ம் தேதி நடந்த 3ம் கட்ட முகாமில் 24.85 லட்சம் பேருக்கும் தடுப்பூசி போடப்பட்டது.
இந்நிலையில், இன்று 4 காம் கட்ட மெகா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. இதற்காக 20 ஆயிரம் இடங்களில் இன்று நடைபெறுகிறது.
Source: News 7 Tamil
Image Courtesy:India Today