தி.மு.க. அரசின் அவலம்: சென்னையில் மின்சாரம் பாய்ந்து 5 பசுமாடுகள் உயிரிழப்பு!
சென்னை மேடவாக்கத்தில் உயர்மின்னழுத்தக் கம்பி அறுந்து விழுந்ததில் 5 பசுமாடுகள் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மேடவாக்கத்தில் உயர்மின்னழுத்தக் கம்பி அறுந்து விழுந்ததில் 5 பசுமாடுகள் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் கடந்த 2 வாரத்திற்கும் மேலாக கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது. அதே போன்று சென்னையில் அதி கனமழை நேற்று முதல் பெய்து வருகிறது. இதனால் பல இடங்களில் மீண்டும் மழைநீர் பாய்ந்தோடுகிறது. இது போன்று மழை காலங்களில் மின்சாரம் எளிதாக பாய் வாய்ப்புள்ளது. எனவே அரசு தகுந்த முன்னெச்சரிக்கை எடுக்க வேண்டும் என்பது அனைவரின் விருப்பமும் ஆகும்.
இந்நிலையில், சென்னை மேடவாக்கத்தில் உயர் மின்னழுத்தக்கம்பி அறுந்து விழுந்துள்ளது. அப்போது அங்கு இருந்த 5 பசுமாடுகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளது. இது போன்ற சம்பவத்திற்கு திமுக அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டுகளை பொதுமக்கள் முன்வைத்து வருகின்றனர். ஒரு வாயில்லாத ஐந்தரிவு ஜீவன் உயிரிழந்திருப்பது திமுக அரசின் அவலநிலையை உணர்த்தும் விதமாக அமைந்துள்ளது.
Source, Image Courtesy: Puthiyathalaimurai