5 கோடி மதிப்பிலான பெருமாள் கோவில் சிலை - சென்னையில் பறிமுதல்!
5 கோடி மதிப்பில் என ஆதிக்கேசவ பெருமாள் கோவிலில் திருடப்பட்ட நான்குக்கும் மேற்பட்ட சிலைகள் சென்னையில் பறிமுதல்.
உளுந்தூர்பேட்டை ஆதிகேசவ பெருமாள் கோவிலில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் திருடப்பட்ட ஐந்து கோடி மதிப்பிலான மூன்று சுவாமி சிலைகள் சென்னையில் உள்ள வீட்டில் தற்போது மீட்கப்பட்டிருக்கிறது. மேலும் அங்கிருந்து 2 கோடி மதிப்பிலான மேலும் 4 சிலைகள் கைப்பற்றப்பட்டு இருக்கிறது. கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை ஆதி கேசவ பெருமாள் கோவிலுக்கு சொந்தமாக கோவிலில் சுவாமி சிலைகள் திருடப்பட்டது. குறிப்பாக ஆதி கேசுவப் பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி ஆகிய மூன்று சிலைகள் 2011 ஆம் ஆண்டு திருட்டுப் போயின.
இது குறித்து உளுந்தூர்பேட்டை காவல் நிலையத்தில் அர்ச்சகர் புகார் ஒன்று அளித்துள்ளார். பின்னர் சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு இந்த வழக்கு மாற்றப்பட்டது. தொலைந்து போன சிலைகளில் புகைப்படங்கள் கோவிலில் இருந்தன. அதன் அடிப்படையில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்றது. உளுந்தூர்பேட்டை கோவிலில் திருடப்பட்ட சிலைகள் ராஜா நகர் ஏழாவது பிரதான சாலை குறுக்கு தெருவில் உள்ள நபரிடம் வீட்டில் பதுங்கி வைத்திருப்பதாகவும் தெரியவந்தது.
இதை அடுத்த அவருடைய வீட்டில் ஆய்வு மேற்கொண்டார்கள், அப்போது மூன்று சிலைகள் மட்டுமல்லாது அதை தவிர நான்கு சுவாமி சிலைகளும் அங்கு கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது. இந்த மூன்று சிலைகளும் சுமார் 300 ஆண்டுகளுக்கும் பழமையானவை. அவற்றின் தற்போதைய சந்தை மதிப்பு 5 கோடிக்கு மேல் இருக்கும் என்றும், மற்ற நான்கு சிலைகளின் சந்தை மதிப்பு 2 கோடி இருக்கும் என்றும் போலிஸ் தரப்பில் கூறப்பட்டிருக்கிறது. இந்த நாளும் சிலைகள் எந்த கோவிலுக்கு சொந்தமானது என்று கண்டறிவதற்காக புகைப்படங்கள் புகைப்படங்களை அறநிலையத்துறை அலுவலகத்திற்கு சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் அனுப்பி இருக்கிறார்கள்.
Input & Image courtesy: News