தமிழகத்தில் 5 நாட்களுக்கு வறண்ட வானிலையே நிலவும்.. சென்னை வானிலை ஆய்வு மையம்.!
தமிழகம் மற்றும் புதுச்சேரி, காரைக்காலில் அடுத்த 5 நாட்களுக்கு வறண்ட வானிலையே நிலவும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவலை வெளியிட்டுள்ளது.
தமிழகம் மற்றும் புதுச்சேரி, காரைக்காலில் அடுத்த 5 நாட்களுக்கு வறண்ட வானிலையே நிலவும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவலை வெளியிட்டுள்ளது.
சென்னையை பொறுத்தமட்டில் அடுத்த 48 மணி நேரத்திற்கு முற்பகலில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். சிறிது நேரம் கழித்து வானம் தெளிவாக காணப்படும்.
அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்ஷியசாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கும் என கூறப்பட்டுள்ளது.