திருவாரூரில் பரபரப்பு: ரேசன் கடையில் வழங்கிய பாமாயிலில் மண்ணெண்ணெய்! 5 பேருக்கு வாந்தி, மயக்கம்!

Update: 2022-04-11 13:08 GMT

ரேஷன் கடையில் வழங்கப்பட்ட பாமாயிலை வைத்து உணவு சமைத்து சாப்பிட்ட 5 பேருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் ரேஷன் கடைகளில் வழங்கப்படும் பொருட்கள் தரமில்லை என்று பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். அதனை உறுதிப்படுத்தும் விதமாக தற்போது புதிய சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது.

இந்நிலையில், திருவாரூர் மாவட்டம், சித்தமல்லி அருகே நொச்சியூர் என்ற கிராமம் உள்ளது. அங்கு ரேஷன் கடை இயங்கி வரும் நிலையில் சரவணன் என்பவர் பாமாயில் வாங்கி சென்றார். இதனை பயன்படுத்தி சமையல் செய்த உணவை சாப்பிட்ட இவரும், தந்தை மற்றும் சகோதரர் உள்ளிட்ட மூன்று பேருக்கும், வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு, மயக்கம் ஏற்பட்டது. அதே போன்று மற்றொருவரான விமலா என்பவரும் உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேலும், ரேஷன் கடையில் வழங்கப்பட்ட எண்ணெய் காலாவதி ஆனதும், அதில் மண்ணெண்ணெய் நாற்றம் வந்ததும் கண்டுப்பிடிக்கப்பட்டது. இந்த சம்பவம் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மக்களிடையே பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்பட்டுள்ளது.

Source, Image Courtesy: Vikatan

Tags:    

Similar News