தமிழகத்தில் சுமார் 54 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் தமிழ் பயிற்று மொழியாக இல்லை என்று தகவல் அறியும் உரிமை சட்டமான (ஆர்.டி.ஐ.) மூலமாக உண்மை அம்பலமாகியுள்ளது. தமிழகத்தில் இந்தியை திமுக தொடர்ந்து எதிர்த்து வருகிறது. தமிழக அரசுப் பள்ளிகளில் தமிழ் மற்றும் ஆங்கிலம் மட்டுமே பயிற்று மொழியாக நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், தமிழகத்தில் தற்போது ஆங்கிலம் மட்டுமே பயிற்று மொழியாக நடத்தப்பட்டு வரும் அரசு பள்ளிகள் பற்றி கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. அதில் கிடைத்த தகவல் படி, 54 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் ஆங்கிலம் மட்டுமே பயிற்று மொழியாக நடத்தப்பட்டு வருகிறது. குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் தமிழ் பயிற்று மொழியாக இல்லை என்று ஆர்.டி.ஐ. மூலமாக பள்ளிக்கல்வித்துறை கூறியுள்ளது.
அதில் பெரும்பாலான பள்ளிகள், சென்னை, செங்கல்பட்டு, சேலம், ஈரோடு, கிருஷ்ணகிரி, திருப்பூர், நீலகிரி, சிவகங்கை, கடலூர் என்று 17 மாவட்டங்களை குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் இந்தியை எதிர்க்கும் திமுக அரசு தமிழ் மொழிக்கு முக்கியத்துவம் அளிக்காமல் ஏமாற்றி வருவது இதன் மூலம் தெரிகிறது.
Source: Dinamalar
Image Courtesy: Times Of India