வேலூர் அருகே ரயில்வே பாலத்தில் ஏற்பட்ட விரிசல்: 65 ரயில்கள் ரத்து!
வேலூர் மாவட்டத்திற்குட்பட்ட காட்பாடி அருகே உள்ள கிரிவலம் என்ற பகுதியில் பொன்னையாற்றுக்கு நடுவில் அமைந்துள்ள ரயில்வே பாலத்தில் விரிசல் ஏற்பட்டது. இதனை சரியான நேரத்தில் கண்டுப்பிடிக்கப்பட்டதால் மிகப்பெரிய விபத்துக்கள் தவிர்க்கப்பட்டுள்ளது. இதனால் அந்த வழியாக கடந்த 3 நாட்களாக ரயில்கள் முற்றிலும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

சென்னை சென்டரில் இருந்து கர்நாடகா, கேரளா மற்றும் கோவை உள்ளிட்ட நகரங்களுக்கு செல்ல வேண்டிய முக்கிய எக்ஸ்பிரஸ் ரயில்கள் உட்பட அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் ரயில்வே பாலத்தை சரி செய்யும் பணியில் இரவு, பகலாக ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். நேற்று (டிசம்பர் 24) மட்டும் 23 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதே போன்று இன்றும் (டிசம்பர் 25) ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனிடையே விரிசல் ஏற்பட்டுள்ள பொன்னையாற்று பாலத்தின் வழியாக கடந்த 3 நாட்களாக செல்ல வேண்டியிருந்த 65 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக 70 ஆயிரம் பயணிகள் பயணம் செய்ய திட்டமிட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், பயணிகளின் சிரமத்தை கருத்தில் கொண்டு பொன்னையாற்று பாலத்தில் ஏற்பட்டுள்ள விரிசலை சரி செய்யும் பணிகள் மிக வேகமா நடைபெற்று வருவதாக ரயில்வே உயர் அதிகாரிகள் கூறியுள்ளனர். இன்று மாலைக்குள் பணிகள் முழு அளவில் முடிக்கப்பட்டு, சோதனை ஓட்டம் நடத்தப்படும். நாளை ரயில்கள் இயக்குவதற்கு அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்படும் எனவும் ரயில்வே அதிகாரிகள் உறுதி அளித்தனர்.
Source, Image Courtesy: Maalaimalar