மகாராஷ்டிரா, கேரளா மாநிலங்களில் இருந்து வந்தால் 7 நாட்கள் தனிமை.. தமிழக அரசு.!

மகாராஷ்டிரா, கேரளா மாநிலங்களில் இருந்து வந்தால் 7 நாட்கள் தனிமை.. தமிழக அரசு.!

Update: 2021-02-25 10:59 GMT

கொரோனா வைரஸ் தொற்று கடந்த சில மாதங்களாக குறைந்து வந்த நிலையில், தற்போது மீண்டும் பல மாநிலங்களில் வைரஸ் தாக்கம் அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு மார்ச் மாதம் தொடங்கிய கொரோனா வைரஸ் தொற்று கிட்டத்தட்ட பல ஆயிரம் உயிர்களை காவு வாங்கியது. இதனால் மருத்துவ விஞ்ஞானிகள் இரவு, பகல் என்று பாராமல் வேலை பார்த்து தடுப்பூசிகளை கண்டுப்பிடித்தனர். இந்தியாவில் கடந்த மாதம் ஜனவரி 16ம் தேதி முதல் முன்கள பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

இந்நிலையில், கடந்த மாதம் நாடு முழுவதும் 10 ஆயிரத்ததுக்கும் குறைவாக பதிவாகி வந்த கொரோனா தொற்று தற்போது 13 ஆயிரத்தை கடந்து செல்கிறது. அது மட்டுமின்றி உயிரிழப்புகளும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதிலும் கேரளா, மகாராஷ்டிரா, டெல்லி போன்ற மாநிலங்களில் கொரோனா தொற்று மிகவும் வேகமாக பரவத்தொடங்கியுள்ளது. இதனை கட்டுப்படுத்த அம்மாநில அரசுகள் தவறி விட்டது. மற்ற மாநிலங்களில் அரசுகள் தீவிரமாக பல்வேறு நடைமுறைகளை அமல்படுத்தியது.

ஆனால் மகாராஷ்டிரா, கேரளா மாநிலங்களில் முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் அம்மாநில அரசுகள் மெத்தனம் காட்டி வருவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். இதன் காரணமாக அம்மாநிலங்களில் கொரோனா தொற்று ஏறுமுகமாகவே காட்சி அளிக்கிறது.

இந்நிலையில், கேரளா மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களில் இருந்து வந்தால் கட்டாயம் 7 நாட்கள் தனிமைபடுத்திக் கொள்ள வேண்டும் என தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இது பற்றி வெளியிட்டுள்ள அரசாணையில், கொரோனா அறிகுறி தென்பட்டால் உடனடியாக பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்றும் அம்மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்திருப்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது என கூறப்பட்டுள்ளது.

Similar News