மருத்துவ இடங்களில் 7.5% இட ஒதுக்கீடு விவகாரம் - ஆளுநர் உடனடியாக அனுமதிக்க முருகன், அண்ணாமலை வேண்டுகோள்!
மருத்துவ இடங்களில் 7.5% இட ஒதுக்கீடு விவகாரம் - ஆளுநர் உடனடியாக அனுமதிக்க முருகன், அண்ணாமலை வேண்டுகோள்!
"கிராமப்புற மாணவர்களுக்கு 7.5% இடஒதுக்கீடு வழங்கும் திட்டத்தை உடனடியாக அனுமதித்து, மாணவர்களின் மனதில் இருக்கும் குழப்பத்தை நீக்க மேதகு ஆளுநரை நான் கேட்டுக்கொள்கிறன். மிக முக்கியமான இதை, இதற்கு மேலும் தாமதப்படுத்த வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்." என்று பா.ஜ.க தமிழக துணைத்தலைவர் அண்ணாமலை வலியுறுத்தி உள்ளார்.
கிராமப்புற மாணவர்களுக்கு 7.5% இடஒதுக்கீடு வழங்கும் திட்டத்தை உடனடியாக அனுமதித்து, மாணவர்களின் மனதில் இருக்கும் குழப்பத்தை நீக்க மேதகு ஆளுநரை நான் கேட்டுக்கொள்கிறன்.
— K.Annamalai (@annamalai_k) October 26, 2020
மிக முக்கியமான இதை, இதற்கு மேலும் தாமதப்படுத்த வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்.
இதே போன்று, நேற்று செய்தியாளர்களை சந்தித்த பா.ஜ.க தலைவர் எல்.முருகன் "ஆளுநர் எடுத்துக்கொண்ட நேரம் போதும்; 7.5% உள்ஒதுக்கீடு மசோதாவுக்கு ஒப்புதல் தர வேண்டும்" என்று கோரினார்.
பா.ஜ.க தலைவர்கள் ஆளுநருக்கு உள் ஒதுக்கீடு விவகாரத்தில் அழுத்தம் கொடுத்து வருவது தமிழக அரசியல் நோக்கர்களால் உற்றுப்பார்க்கப்படுகிறது.