7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு விஷயத்தில் கவர்னர் நல்ல முடிவெடுப்பார்: அண்ணாமலை நம்பிக்கை.!

7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு விஷயத்தில் கவர்னர் நல்ல முடிவெடுப்பார்: அண்ணாமலை நம்பிக்கை.!

Update: 2020-10-20 10:40 GMT

தமிழகத்தில் தினமும் நூற்றுக்கணக்கான பேர் பலவேறு கட்சிகளில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த வண்ணம் உள்ளனர். கட்சித்தலைவர் எல்.முருகன் மற்றும் துணைத்தலைவர் அண்ணாமலை ஆகியோர் மூலம் இப்போது மேலும் நம்பிக்கை ஏற்பட்டு பலர் இணைந்து வருகின்றனர்.

தற்போது அண்ணாமலை திருச்சி, தஞ்சாவூர், அரியலூர் உள்ளிட்ட டெல்டா மாவட்ட பகுதிகளில் தந்து கவனத்தை செலுத்தி வருகிறார். அப்பகுதியில் உள்ள இளைஞர்கள் ஐ.பி.எஸ் சாக இருந்த அண்ணாமலை பாஜகவில் இணைந்ததை அடுத்து அவருக்கு அதிக அளவில் வரவேற்பு அளித்து வருகின்றனர்.

இந்நிலையில், அரியலூர் மாவட்டத்தில் மாற்றுக்கட்சியை சேர்ந்தவர்கள் பாஜகவில் இணையும் நிகழ்ச்சி செந்துறை, உடையார்பாளையம், ஆண்டிமடம் ஆகிய இடங்களில் நடைபெற்றது. செந்துறையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பாஜக மாநில துணைத்தலைவர் அண்ணாமலை புதிய உறுப்பினர்களுக்கு சால்வை போர்த்தி வரவேற்றார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, "மருத்துவ படிப்பில் கிராமப்புற மாணவர்களுக்கு உள் இட ஒதுக்கீடு வேண்டும் என நான்கு ஆண்டுகளுக்கு முன்பே பா.ஜ.க தான் முதலில் வலியுறுத்தியது என்றார்.

தற்போது அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்குவது குறித்து ஆளுநர் நேரம் எடுத்து ஆராய்ந்து நல்ல முடிவை அறிவிப்பார். தமிழக மாணவர்கள் அடுத்த ஆண்டில் இன்னும் அதிகமாக நீட் தேர்வில் தேர்ச்சியடைவார்கள் என நம்பிக்கை தெரிவித்தார். நீட் தேர்வு விவகாரத்திலும், மற்ற விவகாரங்களிலும் "தற்பொதைய கூட்டணித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி நன்றாக செயல்பட்டு வருகிறார்" என கூறினார்.

Similar News