நாடு முழுவதும் 75 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட உள்ளன: ரயில்வேயின் அதிரடி நடவடிக்கை!

நாடு முழுவதும் 75 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட உள்ளன: ரயில்வே துறை இணை அமைச்சர் தகவல்.

Update: 2023-03-02 00:30 GMT

ரயில்வே இணையமைச்சர் தர்ஷனா விக்ரம் ஜர்தோஷ் கரூர் ரயில் நிலையத்தில் இன்று ஆய்வு செய்தார். அப்போது அங்குள்ள பயணிகள் ஓய்வறை மற்றும் கட்டுப்பாட்டு அறை உள்ளிட்டவைகளைப் பார்வையிட்டு அதன் செயல்பாடுகள் குறித்திக் கேட்டறிந்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், இந்தியா முழுவதும் 12 வந்தே பாரத் ரயில்கள் தற்போது இயக்கப்படு வதாகவும், விரைவில் 75 வந்தே பாரத் ரயில்களை நாடு முழுவதும் இயக்க திட்டமிட்டு வருவதாகவும் தெரிவித்தார்.


ரயில் பயணிகளுக்கு உதவும் வகையில் மும்பை IIT மாணவர்கள் செயலி ஒன்றை வடிவமைத்துள்ளதாக அவர் கூறினார். மேலும் அம்ரித் பாரத் திட்டத்தின் மூலம் 75 ரயில் நிலையங்கள் மேம்படுத்தப்பட உள்ளதாகக் கூறினார். மேலும், ரயில்வே துறையில் வளர்ச்சிப் பணிகள் அதிகளவில் செயல்படுத்தப்பட்டு வருவதாகக் கூறிய அவர், கொரோனாவிற்குப் பிறகு நிறுத்தப்பட்ட மூத்தக் குடிமக்களுக்கான ரயில்வே கட்டணச் சலுகை குறித்து பரிசீலிக்கப்படும் என தெரிவித்தார்.


கரூரிலிருந்து சென்னைக்கு பகல் நேரத்தில் ரயில்கள் இயக்கம் குறித்துப் பரிசீலிக்கப்படும் என மத்திய அமைச்சர் தெரிவித்தார். இந்தியாவில் தற்பொழுது வந்தே பாரத் ரயில்கள் அதிக அளவில் இயக்கப்பட்டு வருவதாகவும், மக்களிடம் இருந்து வந்தே பாரத் ரயில்களுக்கு அதிகம் வரவேற்பு கிடைத்து இருப்பதாகவும் குறிப்பிட்டு இருக்கிறார். தொடர்ந்து மத்திய அரசு மக்களின் நலன்களை விரும்பி அதிகமான ரயில்களை இயக்குவதற்கு முயற்சி செய்து வருவதாகவும் குறிப்பிட்டு இருக்கிறார்.  

Input & Image courtesy:News

Tags:    

Similar News