தமிழகத்தைச் சேர்ந்த 8 வீரர்களுக்கு ஒலிம்பிக் பயிற்சி திட்டத்தில் வாய்ப்பு : மத்திய அரசு தகவல்.!

தமிழகத்தைச் சேர்ந்த 8 வீரர்களுக்கு ஒலிம்பிக் பயிற்சி திட்டத்தில் வாய்ப்பு : மத்திய அரசு தகவல்.!

Update: 2020-12-01 09:05 GMT

ஒலிம்பிக்கை இலக்காக நிர்ணயித்து, அதில் வெற்றி பெறும் தகுதியை  நிர்ணயித்துக் கொள்ளும் வகையில் விளையாட்டு வீரர்களுக்கு டாப்ஸ் திட்டம் என்ற பெயரில் மத்திய அரசு தனது செலவில் பல்வேறு உயர் பயிற்சிகளை அளித்து வருகிறது. இந்நிலையில் இந்த திட்டத்தில் தமிழகத்தைச் சேர்ந்த திரு.ஆரோக்கிய ராஜீவ் உட்பட 8 தடகள வீரர்கள் சேர்க்கப்பட்டுள்ளதாகவும், கடந்த 26-ஆம் தேதி நடைபெற்ற 50-வது ஒலிம்பிக் மிஷன் செல் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது. 

இதேபோல் டாப்ஸ் மேம்பாட்டுக் குழுவில் தமிழகத்தின் செல்வி. ஆர் வித்யா, செல்வி.வீரமணி ரேவதி உள்ளிட்ட 7 தடகள வீரர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.

வீரர்களின் திறன் வெளிப்படுதலை அடிப்படையாகக்கொண்டு அடுத்த ஆண்டு டோக்கியோவில் நடைபெறவிருக்கும் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்பதற்கு அவர்களின் தகுதியை ஆராயும் நிகழ்வுகள் நடந்தன. இதன் அடிபப்டையில் அவர்கள் டாப்ஸ் திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தை சேர்ந்த ஆரோக்கிய ராஜீவ் ஆண்களுக்கான 400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளார். திரு ஷிவ்பால் சிங், திருமிகு அன்னு ராணி, திரு நோவா நிர்மல் டாம், திரு அலெக்ஸ் ஆண்டனி, திருமிகு எம்.ஆர். பூவம்மா, திருமிகு துதி சந்த் ஆகியோரும் டாப்ஸ் திட்டத்தில் இடம்பெற்றுள்ளனர்.

இதேபோல் டாப்ஸ் மேம்பாட்டுக் குழுவில் தமிழகத்தைச் சேர்ந்த  வீரமணி ரேவதி, ஆர் வித்யா ஆகியோர் பெண்களுக்கான 400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்களுடன் திரு ஹர்ஷ் குமார், திரு தேஜஸ்வின் ஷங்கர், திருமிகு ஷைலி சிங், திருமிகு சாந்திரா பாபு மற்றும் திருமிகு ஹர்ஷிதா ஷெராவத் ஆகியோரும் இந்தக் குழுவில் இணைக்கப்பட்டுள்ளனர்.

Similar News