8 மாவட்டங்களை தவிர ஏற்றுமதி நிறுவனங்கள் செயல்படுவதற்கு அனுமதி.!

கோவை, திருப்பூர் உள்ளிட்ட 8 மாவட்டங்களை தவிர்த்து பிற பகுதிகளில் ஏற்றுமதி நிறுவனங்கள் செயல்படுவதற்கு தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. கடந்த முறை ஊரடங்கு உத்தரவில் ஏற்றுமதி நிறுவனங்களுக்கு தமிழக அரசு தடை விதித்திருந்தது. இதனிடையே தற்போது அதற்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

Update: 2021-05-29 09:20 GMT

கோவை, திருப்பூர் உள்ளிட்ட 8 மாவட்டங்களை தவிர்த்து பிற பகுதிகளில் ஏற்றுமதி நிறுவனங்கள் செயல்படுவதற்கு தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. கடந்த முறை ஊரடங்கு உத்தரவில் ஏற்றுமதி நிறுவனங்களுக்கு தமிழக அரசு தடை விதித்திருந்தது. இதனிடையே தற்போது அதற்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

ஆனால் கொரோனா தொற்று அதிகமாக பரவியுள்ள கோவை, திருப்பூர், சேலம், கரூர், ஈரோடு, நாமக்கல், திருச்சி, மதுரை ஆகிய 8 மாவட்டங்களில் தடை உத்தரவு தொடரும் என கூறப்பட்டுள்ளது. அதே போன்று அனுமதிக்கப்பட்டுள்ள தொழிற்சாலை ஊழியர்கள் ஒரு மாதத்திற்குள் தடுப்பூசி கட்டாயமாக போடப்பட்டிருக்க வேண்டும் என அரசு உத்தரவில் கூறியுள்ளது.

தொழிற்சாலைகளுக்கு நான்கு சக்கர வாகனங்களில் மட்டுமே அழைத்து செல்ல வேண்டும் என்ற விதி தொடர்கிறது.

Tags:    

Similar News