வண்டலூர் உயிரியல் பூங்காவில் 9 சிங்கங்களுக்கு கொரோனா வைரஸ் உறுதி.!

சென்னை, வண்டலூர் உயிரியல் பூங்காவில் 9 சிங்கங்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மனிதர்களை வாட்டி வதைத்து வரும் கொடிய வைரஸ் தொற்று பல லட்சம் உயிர்களை பலி வாங்கி வரும் நிலையில், தற்போது விலங்குகளையும் விட்டுவைக்கவில்லை.

Update: 2021-06-04 11:46 GMT

சென்னை, வண்டலூர் உயிரியல் பூங்காவில் 9 சிங்கங்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மனிதர்களை வாட்டி வதைத்து வரும் கொடிய வைரஸ் தொற்று பல லட்சம் உயிர்களை பலி வாங்கி வரும் நிலையில், தற்போது விலங்குகளையும் விட்டுவைக்கவில்லை.

இந்நிலையில், சென்னை வண்டலூர் உயிரியல் பூங்காவில் உள்ள 9 சிங்கங்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அங்குள்ள 11 சிங்கங்கள் சாப்பிடாமல் சளியுடன் அவதியுற்று வந்துள்ளது.

இதனையடுத்து சிங்கங்களின் சளி மாதிரியை பரிசோதனை செய்ததில் 9 சிங்கங்களுக்கு தொற்று இருப்பது உறுதியானது. கடந்த மே மாதம் 26ம் தேதி முதல் கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக பூங்கா மூடப்பட்டுள்ளது. தற்போது பணியாளர்கள் மட்டுமே பூங்காவில் உள்ளனர். அப்படி இருந்தும் எப்படி சிங்கங்களுக்கு தொற்று உறுதியானது என்று பூங்கா நிர்வாகிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News