ஈரோடு: ஒரே நேரத்தில் காவல் நிலையத்தில் தஞ்சமடைந்த 9 காதல் ஜோடிகள்!

ஈரோடு மாவட்டம், பவானி காவல் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு ஒரே நாளில் 9 காதல் ஜோடிகள் தஞ்சமடைந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.;

Update: 2021-08-21 07:19 GMT

ஈரோடு மாவட்டம், பவானி காவல் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு ஒரே நாளில் 9 காதல் ஜோடிகள் தஞ்சமடைந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், ஈரோடு மாவட்டம், பவானி சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 9 காதல் ஜோடிகள் தங்களின் திருமணங்களுக்கு பெற்றோர்கள் சம்மதம் தெரிவிக்காத காரணத்தினால் நேற்று முகூர்த்த நாள் என்பதால் பல்வேறு இடங்களில் திருமணம் செய்து கொண்ட காதல் ஜோடிகள், பாதுகாப்பு கேட்டு பவானி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தஞ்சமடைந்துள்ளனர்.

இதனை தொடர்ந்து மகளிர் போலீசார் காதல் ஜோடிகளின் பெற்றோர்களை வரவழைத்து அவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர். இதில் 8 காதல் ஜோடிகளின் பெற்றோர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. ஒரு காதல் ஜோடியின் பெற்றோர் மட்டும் ஏற்றுக்கொண்டனர்.

மீதம் 8 ஜோடிகளில் பெண்களை மணமகன் வீட்டாருடன் போலீசார் அனுப்பி வைத்தனர். ஒரே நாளில் 9 காதல் ஜோடிகள் பாதுகாப்பு கேட்டு மகளிர் காவல் நிலையத்தில் தஞ்சமடைந்த சம்பவம் ஈரோடு மாவட்டத்தில் பெரும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

Source: News 7

Image Courtesy: News 7 Tamil

https://news7tamil.live/9-love-marriage-couple-ajar-in-police-station.html

Tags:    

Similar News