ஆதார் இணைக்காவிட்டால் ஒரு யூனிட்டிற்கு ரூ.8 அபராதம்: அதிகாரிகள் விளக்கம்!
மின் இணைப்புடன் ஆதாரை இணைக்காவிட்டால் ஒரு யூனிட்டிற்க்கு ரூபாய் 8 ரூபாய் அது அபராதம் விதிக்கப்பட்டு இருக்கிறது.
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக வருவாய் பிரிவு தலைமை நிதி கட்டுப்பாட்டாளர் மலர்விழி அறிக்கையில் தமிழக அரசின் சார்பில் அறிக்கை ஒன்று வெளியிட்டு இருக்கிறார். மேலும் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறுகையில், மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க பலர் தயக்கம் காட்டுகிறார்கள் ஏன் என்று தெரியவில்லை? . ஆதார் எண்ணை இணைக்க இரண்டு நிமிட நேரம் போதும். மின்கட்டணம் செலுத்தும் இடங்களில் இதற்காக தனியாக கூடுதல் பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள். உரிமையாளர்கள் தான் செல்ல வேண்டும் என்ற அவசியம் கிடையாது.
மின் இணைப்பை இணைத்திருப்பவர்களில் நாட்டில் 60 லட்சம் பேர் 100 யூனிட்டுக்குள் வருகிறார்கள். அவர்களுக்கு எந்த சிக்கலும் கிடையாது. அதை போல் பொது பயன்பாடு மீட்டரை இரண்டு லட்சத்து 88 ஆயிரம் பேர் வைத்துள்ளார்கள். அவர்கள் முழு தொகையை செலுத்துவதில் அவர்களுக்கும் பிரச்சினையை இருக்கிறது. வீட்டு உபயோகத்தில் இரண்டு கோடி 30 லட்சம் யூனிட்டுக்கு 100 யூனிட் மானியம் வழங்கப்படுகிறது. அதில் ஒரு வீட்டுக்கு ஒரு இணைப்பு தான் என்ற அடிப்படையில் ஆதாரங்களை இணைக்க சொல்லி இருக்கிறோம். அதை செய்தால் கட்டாயம் மானியம் கிடைக்கும்.
சப் மீட்டர் வைத்திருந்தால் அது எங்கள் கணக்கில் வராது. முழு ரீடிங் தான் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். ஆனால் தனித்தனி வீடாக இருந்து, தனித்தனி சர்வீஸ் வைத்திருந்தால் அதை வீடுகளுக்கு 100 யூனிட் மானியம் கிடைக்கும். எனவே ஒரு வீட்டில் ஒரே பெயரில் இரண்டு மின் இணைப்பு இருந்தால் அதை ஆதார் மூலம் கண்டறிந்து ஒரு மீட்டராக கணக்கில் எடுத்துக் கொண்டு வருவோம். இல்லையினால் இரண்டு மீட்டர் அவசியமென்றால் அதற்கு பொது பயன்பாடு கட்டணமாக யூனிட் 8 ரூபாய் கணக்கில் வரும். எனவே பொதுமக்கள் அனைவரும் தங்களுடைய வீட்டு மின் இணைப்புகளை ஆதாருடன் இணைக்க வேண்டும், இல்லையென்றால் ஒரு யூனிட்டருக்கு ரூபாய் எட்டு அபராதமாக விதிக்கப்படும் என்று கூறப்பட்டிருக்கிறது.
Input & Image courtesy: Maalaimalar News