வாக்காளர் அட்டையுடன் ஆதார் இணைக்கும் பணி - முடிய இருக்கும் கால அவகாசம்!

வாக்காளர் அட்டையுடன் ஆதார் இணைக்கும் பணி வருகின்ற 31 ஆம் தேதி கால அவகாசம் முடிவடைகிறது.

Update: 2023-03-05 07:21 GMT

தற்பொழுது பல்வேறு அடையாள அட்டைகளில் ஆதார் எண்ணுடன் இணைக்கப்படும் பொழுது அவற்றின் உடைய பாதுகாப்பு உறுதி செய்யப்படுகிறது. குறிப்பாக போலி என்று ஒரு சொல்லிற்கு இடமில்லை. அந்த வகையில் தற்பொழுது வாக்காளர் அட்டையை ஆதார் எண்ணுடன் இணைக்கும் பணி தற்போது வேகமாக நடைபெற்று வருகிறது. நாடு முழுவதும் போலி வாக்காளர் அடையாள அட்டையை ஒழிக்கவும் ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் வாக்குரிமை வைத்திருப்பவர்களை தடுக்கவும் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் திட்டம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஒன்றாம் தேதி தொடங்கப்பட்டது.


அதே நேரத்தில் வாக்காளர்களின் சொந்த விருப்பத்தின் பெயரிலேயே ஆதார் எண் விவரங்களை பெற வேண்டும் என்றும், யாரையும் கட்டாயப்படுத்த கூடாது என்று இந்திய தேர்தல் கமிஷன் அறிவித்திருந்தது. இதனால் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பில் பெரும் அளவில் பொதுமக்கள் விருப்பம் காட்டவில்லை. அந்த வகையில் தமிழகத்தில் வருகின்ற 31ம் தேதியுடன் இதனுடைய கால அவகாசம் முடிவடைகின்றது. ஆனால் நேற்று முன்தினம் வரை தமிழகத்தில் 66.4 சதவீதம் பெயரில் அதாவது நான்கு கோடியே 8 லட்சம் பெயர் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைத்து இருக்கிறார்கள் என்று தகவல்கள் கிடைக்கப்பெற்று இருக்கிறது.


எனவே மேற்கொண்டு கால நீடிப்பு வழங்கப்படுமா? என்பது குறித்து தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி கூறும் பொழுது, கால நீடிப்பு வழங்குவது தொடர்பாக இந்திய தேர்தல் கமிஷன் விரைவில் முடிவு எடுக்கும் என்று கூறியிருக்கிறார்.

Input & Image courtesy: Dinamalar

Tags:    

Similar News