ஆவின் பால் விற்பனை 1 மடங்கு தான்... ஆனால் செலவு 2 மடங்கு... எங்கேயோ கணக்கு இடிக்குதே?

ஆவின் பால் நிறுவனத்தின் விற்பனை குறைவாக இருக்கிறது, ஆனால் அதனுடைய செலவு பல மடங்கு அதிகமாக இருக்கிறது.

Update: 2023-04-06 00:30 GMT

மதுரையில் தற்போது ஆவின் பாலகங்களில் சுமார் 2.10 லிட்டர் விற்பனை செய்யப்படும். ஆனால் தற்பொழுது தமிழக முழுவதும் ஏற்பட்டுள்ள பால் உற்பத்தியாளர்கள் போராட்டம் ஆனது பால் வரத்தை முற்றிலும் தடை செய்து இருக்கிறது. எனவே ஆவின் நிறுவனத்திற்கு வரும் பால் முன்பே காட்டிலும், பெருமளவில் குறைந்து இருக்கிறது. தற்போது உள்ள ஆளும் கட்சியும் பால் உற்பத்தியாளர்களின் போராட்டத்தை பெரிது படுத்தாமல் ஆவின் நிறுவனம் நல்ல முறையில் செயல்படுவதாக வெளியில் கூறி வருகிறார்கள்.


ஆனால் மதுரையில் பால் பண்ணைகளில் உள்ள விற்பனை தற்போது 30,000 லிட்டர் குறைந்து இருக்கிறது. உண்மை காட்டிலும் குறைவான அளவில் பால் பாக்கெட்டுகளை விற்பனை செய்து வருகிறார்கள். இதை தவிர மகாராஷ்டிராவில் இருந்து வெண்ணெய் வாங்கப்பட்டு, நெய் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தற்போது 2.10 லிட்டர் பால் உற்பத்தி செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்ட பொழுது எவ்வளவு செலவினங்கள் ஆவின் நிறுவனம் காட்டியதோ? அவ்வளவு செலவினங்கள் தற்பொழுது காட்டி வருகிறது.


இருந்தாலும் தற்போது ஆவின் நிறுவனம் 30,000 லிட்டர் குறைவாக விற்பனை செய்வது குறிப்பிடத்தக்கது. இருந்தாலும் ஒரு தரப்பினர் இது பற்றி கூறுகையில், பல்வேறு அதிகாரிகள் கமிஷனுக்கு ஆசைப்பட்டு ஆவின் நிறுவனத்தின் செலவினத்தை குறைத்து காட்டாமல் முன்பு இருந்த மாதிரியே அதிகமாக காட்டுகிறார்கள். மேலும் இதில் ஏதாவது முறைகேடு குளறுபடிகள் அரங்கேறி இருப்பதால் என்பது குறித்தான தணிக்கைகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Input & image courtesy: Dinamalar

Tags:    

Similar News