ஸ்டாலினிடம் நல்ல பெயர் எடுக்கும் முயற்சி... குறுக்கு வழியில் ஆவின் நிறுவனம்... பரபரப்பு பின்னணி என்ன?

தமிழக அரசிடம் நல்ல பெயர் எடுக்கும் முயற்சியில் ஆவின் நிறுவனம் குறுக்கு வழியில் செயல்படுவதாக பால் முகவர்கள் நலச்சங்கம் குற்றச்சாட்டு.

Update: 2023-03-28 09:51 GMT

தமிழக அரசிடம் குறிப்பாக மு.க.ஸ்டாலின் அவர்களிடம் நல்ல பெயர் எடுக்க வேண்டும் என்ற ஒரு முயற்சியின் கீழ் ஆவின் நிறுவனம் குறுக்கு வழியில் செயல்படுகிறது என பல்வேறு குற்றச்சாட்டுகள் தமிழகத்தில் எழுந்து இருக்கின்றது. சென்னையில் இருக்கும் ஆவின் நிறுவனம் சமீபத்தில் விநியோகம் செய்த 60 ஆயிரம் லிட்டர் பால் கெட்டுப் போனதாக பால் முகவர்கள் நல சங்கம் குற்றம் சாட்டி இருக்கிறது. தமிழகம் முழுவதும் தற்சமயம் பால் உற்பத்தியாளர்கள் பல்வேறு போராட்டங்களை ஈடுபட்டு வருகிறார்கள். ஆவின் நிறுவனத்திற்கு பால் வரத்து கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்கிறது.


தமிழகத்தில் இருந்து பல்வேறு பால் உற்பத்தியாளர்கள் ஆவின் நிறுவனத்திற்கு பாலை தர மறுத்து இருக்கிறார்கள். இதன் காரணமாக ஆவின் நிறுவனம் பால் கொள்முதலை தமிழகத்தில் நிறுத்திவிட்டு மகாராஷ்டிராவில் இருந்து பால் பவுடர், வெண்ணெய், நெய் போன்றவற்றை வாங்குவதாக ஏற்கனவே குற்றச்சாட்டு எழுந்து இருக்கிறது. ஆனால் தமிழகத்தில் ஆவின் நிறுவனத்திற்கு பால் தட்டுப்பாடு எதுவும் இல்லை. பால் உற்பத்தியாளர்கள் போராட்டத்தை கண்டு கொள்ளாமல் அரசு புறம் தள்ளி வருகிறது. இந்நிலையில் இரண்டு தினங்களுக்கு முன்பு கெட்டுப்போன பாலை பாக்கெட்டுகளில் விற்பனை செய்த ஆவின் நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பால்நல உற்பத்தியாளர்கள் சங்கம் வேண்டுகோளை விடுத்து இருக்கிறது.


வெளி மாநிலங்களில் இருந்து வாங்கப்படும் பால் பவுடர்களை கரைத்து அவற்றை சமன்படுத்தி பால் உற்பத்தி செய்து அதை மக்களிடம் தற்போது விநியோகம் செய்துவதாக கூறப்படுகிறது. மேலும் இந்த நடைமுறையில் சிக்கல்கள் இருப்பதாகவும் கோவை ஒன்றியத்தில் சில தினங்களுக்கு முன்பு அதிகாரிகள் மெத்தன போக்கில் 35 ஆயிரம் லிட்டர் பால் கெட்டுப் போனதாகவும் தெரிய வருகிறது. இப்படி பால் பவுடர்களை பாலாக மாற்றும் பொழுது அவற்றை மறுநாள் காலையில் பாக்கெட்டுகளில் விற்பனை செய்வதன் மூலம் அவை எளிதில் கெட்டு போகும் தன்மை உடையதாக இருப்பதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டை வருகிறார்கள். 60 ஆயிரம் லிட்டர் நிலைப்படுத்தப்பட்ட பால் பாக்கெட்டுகள் கெட்டுப் போய், சுமார் ரூ.26 லட்சம் இழப்பு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.

Input & Image courtesy: The Hindu

Tags:    

Similar News