குறைந்த எடையில் ஆவின் பால் விற்பனை: தி.மு.க ஆட்சியில் தொடர்ந்து நடைபெறும் ஊழல் புகார்!
குறைந்த எடை கொண்ட ஆவின் பால் விற்பனை செய்யப்படுவதாக தொடர்ந்து அதிர்ச்சி தரும் தகவல் வெளியாகி இருக்கிறது.
ஆவின் பால் எடை குறைக்கப்பட்டு இருப்பது தற்போது நுகர்வோர் இடம் பெறும் அதிர்ச்சி ஏற்படுத்தி இருப்பதாக பெரும் பரபரப்பை தமிழகத்தில் ஏற்படுத்தி இருக்கிறது. ஆவின் நிறுவனம் சார்பில் சென்னையில் தினமும் 14,000 லிட்டர் பால் விற்பனை செய்யப்படுகிறது. குறிப்பாக சென்னையில் மாதவரம், அம்பத்தூர் சோளிங்கநல்லூர் பால் பண்ணையில் இருந்து தினமும் பால் பாக்கெட்டுகள் உற்பத்தி செய்யப்படுகிறது.
வட மாநில தொழிலாளர்கள் தங்களுடைய ஊர்களுக்கு தற்போது சென்றிருக்கின்ற காரணத்தினால் உள்ளூர் தொழிலாளர்களை வைத்து பால் பாக்கெட் உற்பத்தி செய்யப்படுகிறது. பால் உற்பத்தியாளர்கள் பல்வேறு கோரிக்களை வலியுறுத்தி அதை ஏற்க மறுத்த ஆவின் நிறுவனத்தில் இரண்டு நாட்களாக போராட்டமும் நடத்தப்பட்ட வருகிறது என்ற நிலையில் சென்னைக்கு ஆவின் பால் வரத்து குறைந்து வருகிறது.
இதை பயன்படுத்தி ஆவின் பால் பண்ணைகளில் உள்ள அதிகாரிகள் புதிய ஒரு மோசடியில் ஈடுபட்டு இருக்கிறார்கள். குறிப்பாக பால் பாக்கெட் எடை தற்போது குறைவாக அனுப்பி இருக்கிறார்கள். கடந்த இரண்டு தினங்களாக விற்பனைக்கு வரும் ஆரஞ்சு மற்றும் சிவப்பு நிற பால் பாக்கெட் 482, 485, 487 கிராம் அளவிலேயே எடை கொண்டதாக இருக்கிறது. 520 எடை உள்ள பால் பாக்கெட்களில் இடையில் அளவுகளை குறைத்து நுகர்வோரை ஏமாற்றி வருகிறார்கள்.
Input & Image courtesy: Dinamalar