ஆவின் பால் விலையை தொடர்ந்து டீ, காபி விலை உயர்வு - புலம்பும் சாமானிய மக்கள்!

ஆவின் பால் விலையை தொடர்ந்து டீ, காபி விலையும் தற்போது உயர்ந்து இருப்பதால் சாமானிய மக்கள் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்கள்.

Update: 2022-11-07 00:42 GMT

தமிழ்நாட்டில் ஆவின் பால் ஆரஞ்சு நிற பாலின் வேலை உயர்த்தப்பட்டுள்ள நிலையில் சாமானிய மக்கள் பாதிப்பு அடைந்து இருக்கிறார்கள். மேலும் வணிக ரீதியாக பயன்படுத்தப்படும் பாலின் விலை உயர்ந்த பட்டிருக்கிறது. பால் விலை உயர்வு காரணமாக தற்பொழுது மதுரையில் டீ,காபிகள் உயர்த்தப்பட முடிவு எடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு ஆரஞ்சு நிற பால்பாக்கெட் பிள்ளை உயர்த்தப்பட்டு இருக்கின்ற காரணத்தினால் இதனை வாங்கும் நபர்கள் மட்டும் 12 ரூபாய் உயர்த்தி இனி பால் பாக்கெட் 48 இலிருந்து அறுபது ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.


பால் விலை உயர்த்தி இரண்டு நாட்களுக்குள் தற்போது பாலின் மூலம் கிடைக்கும் டீ, காபி களின் விலையும் தற்பொழுது உயர்த்தப்பட்டு இருக்கிறது. இந்த பால் பாக்கெட்களை 11 லட்சம் பேர் வாங்கி வருகின்றனர். ஆனால் அதே சமயம் பால் அட்டை வைத்திருப்பவர்களுக்கு அதே 46 ரூபாய்க்கு மட்டுமே விற்கப்படும். பால் அட்டை வைத்து ஆரஞ்சு நிற பால் வாங்கு நபர்களுக்கு அதே விலையில் விற்பனை செய்யப்படும்.


இந்த விலை ஏற்றம் காரணமாக நேரமாக மக்கள் பாதிக்கப்பட மாட்டார்கள். தினசரி பால் வாங்கும் மக்கள் பாதிக்கப்பட மாட்டார்கள். பல்வேறு ஏழை, எளிய மக்களும் தினமும் தங்களுடைய பசியை போக்கிக் கொள்வதற்காக டீ, காபி முதலியவற்றை நாடுகிறார்கள். ஆனால் அதனுடைய விலை ஏற்றம் தற்போது அவர்களை மிகவும் அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது. திமுக பதவி ஏற்றதிலிருந்து ஏழை எளிய மக்களின் பல்வேறு பண சுமைகள் கூடுதலாகவே இருந்து வருகிறது.

Input & Image courtesy:Oneindia News

Tags:    

Similar News